சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தின் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி
Updated on : 06 August 2018

சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக  SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார்.





"இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு  இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை நம்பிக்கையோடு அணுகினோம். கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டதற்கு அவருக்கு நன்றி.சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். அவர்களுக்கும் ஹிப் ஹாப் ஆதியை பிடிக்கும் என்பதால் இந்த கூட்டணியின் வெற்றி நிச்சயம் பெரிசாக இருக்கும்.

எல்லா தரப்பு ரசிகர்களையும் தன் படம் மூலம் கவர்ந்து வைத்து இருக்கும் இயக்குனர் ராஜேஷ்  உடன் இருப்பது ஒரு தயாரிப்பாளராக எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. மக்களை கவரும்  ஜனரஞ்சகமான படம் , மக்களை ஈர்க்கும் ஜனரஞ்சகமான இசை என்று உத்திரவாதமான ஒரு வெற்றி படம் உருவாகிறது என உறுதியாக கூறுகிறேன்" என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. 





S K 13 படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைப் பெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா