சற்று முன்

சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |   

சினிமா செய்திகள்

‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!
Updated on : 24 March 2026

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, புதிய திரை அனுபவத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



 



வெளியான டீசர் முழுவதும் அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பி, ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் மலையாள திரையுலகை மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் முக்கியமான சாதனையை பதிவு செய்யும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய அம்சங்களும் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



 



இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பிஜாய், தனது இசையால் மேலும் கவனம் ஈர்த்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடலை அகில் ஜே. சந்த் மற்றும் அவனி மல்ஹார் இணைந்து பாடியுள்ளனர். மோகன் ராஜா எழுதிய இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.



 



இந்த படத்தில் விஜயராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக தோன்றுகிறார். டீசருடன் சேர்த்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான குடும்பப் பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



 



‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், டிஜோ ஜோஸ் ஆண்டனி – ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் என்பது சிறப்பம்சமாகும். இவர்களின் முந்தைய படங்களான குயின், ஜன கண மன மற்றும் மலையாளி ஃபிரம் இந்தியா ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன.



 



மேலும், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான எஸ். எஸ். ராஜமவுலி, ‘ஜன கண மன’ திரைப்படத்தை பாராட்டியது இந்தக் கூட்டணிக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்தது.



 



எஸ். சுரேஷ் பாபு எழுதிய கதைக்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா