சற்று முன்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

கலைஞர் கருணாநிதித்தான் ஆண் தேவதை - தயாரிப்பாளர் மாரிமுத்து
Updated on : 10 August 2018

சமுத்திரகனி மற்றும்  ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான "ஆண் தேவதை" படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி  நடப்பதாக இருந்தது.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி  முடிவு செய்து உள்ளனர். இது குறித்து "ஆண் தேவதை" திரைப் படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் productions என்கிற நிறுவனத்தின் நிறுவனர்  மாரிமுத்து கூறுகையில் "ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு இந்த காலக் கட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு செய்த சேவைகள் , சாதனைகள் அதிகம். "ஆண் தேவதை" இசை வெளியீட்டு  விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்ய.வேண்டிய கட்டாயம்.  கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன, என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். ஆனாலும் இசை வெளியீடு தொழில் நுட்ப முறை கட்டாயத்தில் இன்று வெளி ஆவதை தவிர்க்க முடியாதது  என்று இசை உரிமையை பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை. 





தமிழ் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளை சொல்லும் இந்த படத்துக்கு  நம்மை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற கலைஞரின் ஆன்மா ஒரு "ஆண் தேவதை" போல் இருந்து  ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்" என்று தெரிவித்தார் மாரிமுத்து.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா