சற்று முன்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்
Updated on : 10 August 2018

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 



படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. 



விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா