சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன வேற லெவல் படம் - சரண்யா பொன்வண்ணன்
Updated on : 13 August 2018

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக 'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். 



நாயகன் துருவாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் அடித்துள்ளார். மற்றும் மனோபாலா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்



விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்தும், படம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.



"ஒரு படத்துல நடிக்க அழைப்பு வரும்போது, அந்தப்படத்தின் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எல்லோருமே கிட்டத்தட்ட புதுமுகங்களா இருந்தாங்கன்னா, நான் முக்கியமா படத்தையோட கதையை கேட்பேன்.. அதற்கப்புறமா அதுல என்னோட கதாபாத்திரத்தையும் கேட்டுட்டுத்தான் ஒத்துக்குவேன். சில கதைகளை, 'சரி.. பண்ணுவோமே' என்கிற அளவு ஈடுபாட்டுடன் தான் நடிப்போம்.. ஆனால் சில கதைகள் இதில் நாம நடிச்சே ஆகணும்னு சொல்ற அளவுக்கு சூப்பரா இருக்கும்.. அப்படி ஒரு படம் தான் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'.



இந்தப்படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டு பெண்ணாகத்தான்   நடிச்சிருக்கேன்..ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.. படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது.. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட்டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன்..



தொடர்ந்து அம்மா கேரக்டராகவே பண்றீங்களேன்னு பலரும் கேட்கத்தான் செய்றாங்க. ஆனாலும் கடவுளின் அருளாலும், இயக்குனர்களின் புதிய கற்பனைகளாலும் எனக்கு படத்துக்குப்படம் வித்தியாசமான அம்மா கேரக்டர்களாக கிடைத்து வருகின்றன. இந்தப்படம் பார்ப்பதற்கு சின்னப்படமா தெரிஞ்சாலும், படம் பார்க்கிறப்ப உங்களை அப்படி, இப்படினு நகரவிடாம கட்டிப்போட்டுரும்" என்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா