சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன்வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடல்
Updated on : 13 August 2018

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு கபிலன்வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார். மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடவிருக்கிறார்கள்.பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா