சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

கேரளாவில் நிவாரண பொருட்களை வழங்கிவரும் அபிசரவணன்
Updated on : 15 August 2018

தற்போது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.



அந்தவகையில் 'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.. மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..



நிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன்..



வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன். அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர், 



இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .



இந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த்  மற்றும்  ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா