சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்
Updated on : 19 August 2018

நகரத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும் பொறாமைப்படும் ஒரு ட்ரெண்டியான நகர்ப்புற பையனாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாண் தனது சமீபத்திய வெற்றிப்படமான 'பியார் பிரேமா காதல்' படத்தில் தனது அழகிய தோற்றம் மற்றும் நடிப்புக்காக மூலை முடுக்கெல்லாம் பாராட்டையும்,  அன்பையும் பெற்றிருக்கின்றார். வேறு எந்த நடிகரும் இந்த நிலையை அடைந்திருந்தால் அதே வழியில் பயணிக்க விரும்புவர். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார். ஆம், புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய விஷயம் தான் இது. நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.



இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, "ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.



மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்தில் இசை விருந்து வைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது. 



இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா