சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் பட்டியல்; யாரெல்லாம் கேப்டன்ஸ்?
Updated on : 31 March 2016

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட இருக்கும் நடிகர் சங்கம் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் அணிகள் களமிறங்குகின்றன.



 





8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான அணியின் பெயர்கள் மற்றும் அணி தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



 





முக்கிய தமிழக  நகரங்களின் பெயர்களோடு அணிகளின் பெயர் கோர்க்கப்பட்டுள்ளன. சென்னை சிங்கம்ஸ், மதுரை காலேஜ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராமநாடு ரைனோஸ், சேலம் சீட்டாஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டி தொடரில் பங்கேற்கின்றன.



 





இந்த அணிகளுக்கு விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேப்டன்களாக இருக்கின்றனர். மேலும் நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா,  நயன்தாரா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



 





இதுவரை சிசிஎல்-ல் கூட பங்கேற்காத நடிகர் தனுஷ், நடிகர் சங்கம் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஒரு அணிக்கு தலைமை ஏற்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை.



 





மேலும்  ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடரை துவக்கிவைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா