சற்று முன்

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |   

சினிமா செய்திகள்

Theerpugal Virkkapadum படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது
Updated on : 08 February 2019

தனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.



" சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான  மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி." என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.



புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், "சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய " வெட்னஸ்டே" பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது.  படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் , கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.



இத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது  இதுவே முதல் முறை.  படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். " யாமிருக்க பயமேன்" புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா