சற்று முன்
சினிமா செய்திகள்
கண்ணே கலைமானே படம் பார்த்து மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் - திரு.தொல். திருமாவளவன்
Updated on : 08 February 2019

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடித்து வெளிவர தயாராக இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் சிறப்பு காட்சி நேற்று மாலை அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும் மிக சிறப்பான திரைப்படம் என்ற கருத்தை சொன்னார்கள். அதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்கள் கண்ணே கலைமானே மிக சிறந்த யதார்த்தமான திரைப்படம் என்றும் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் வடிவுக்கரசி என நடித்திருக்கும் அணைத்து நடிகர்களையும் யதார்த்தம் மீறாமல் சீனு ராமசாமி நடிக்க வைத்துள்ளார் என பாராட்டினார். மேலும் திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தை கிராம சூழலுக்கு இட்டுச்செல்கிறது. மொத்தத்தில் கவித்துவமான குடும்ப படம் என பாராட்டி திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்களை சொன்னார் .
சமீபத்திய செய்திகள்
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்.
மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை பார்வையாளர்கள் பெற இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடுகிறது.
ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!
சென்னை, ஜூலை 30, 2025 — ஹார்ட்பீட், ஆஃபிஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது — போலீஸ் போலீஸ். இது ஒரு அதிரடியான போலீஸ் டிராமா ஆகும், விரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில், ஷபானா ஷாஜஹான் (குக் வித் கோமாளி), சுஜிதா தனுஷ் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), சத்யா (பிக் பாஸ்), வின்சென்ட் ராய், மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஒரு கண்டிப்பான போலீஸ் இடையிலான மோதலை குறிக்கிறது.
போலீஸ் போலீஸ் தொடரில், உணர்ச்சி பூர்வமான மோதல்கள், தீவிர விசாரணைகள் மற்றும் அதிகமான பதற்றம் நிறைந்த காட்சிகள் இடம்பெற உள்ளன. இது ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ், பார்வையாளர்களை முன்னிறுத்தும் தமிழ் மக்களுக்கே உரித்த பாணியில் மேலும் விரிவாக்குகிறது.
ப்ரொமோக்கள், ரிலீஸ் தேதிகள் மற்றும் பிற அறிவிப்புகளுக்காக ஜியோஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா பக்கங்களை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்
புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் 'ரதியே ரதியே...' பாடல் விரைவில் வெளியாகவுள்ள 'அந்த 7 நாட்கள்' படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது.
சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு புதியவராக இருந்தாலும் இசைக்கு மெருகூட்டியுள்ளார். 'ரதியே ரதியே...' பாடல் மெல்லிசையாக மட்டுமல்லாது ஆழமான உணர்வையும் கொடுத்துள்ளார். ஹரிசரண் குரல் மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் கதை ஆழமானது. இன்றைய சமூகத்தில் அந்நியப்பட்ட மனதுடன் இருப்பவர் தான் கதாநாயகன். அவருக்கு இணையான, தர்க்கரீதியான வழக்கறிஞர் உண்மைகள் மற்றும் பகுத்தறிவு மூலம் உலகைப் பார்க்கிறார். 'ரதியே ரதியே...' பாடல் இந்த மாறுபட்ட உலகங்களுக்கு இடையே ஒலி பாலமாக மாறி, அவர்களின் காதலை எதிரொலிக்கிறது.
பாடலாசிரியர் மோகன் ராஜா உணர்ச்சிகரமான கவிதையாக பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். லலித் தல்லூரியின் புல்லாங்குழல், பாடலை தெய்வீகமாக மாற்றியுள்ளது. பெண்மையைக் குறிக்கும் புல்லாங்குழலும், இதயத் துடிப்பைக் குறிக்கும் மிருதங்கமும் இணைந்து இந்தப் பாடலை அன்பின் கொண்டாட்டமாக மாற்றியுள்ளன. விஜய் கணேசன் ஒலிக்காட்சிக்கு மேலும் ஆழத்தைச் சேர்க்கும் வகையில் ஒலி, எலெக்ட்ரிக், நைலான் கித்தார் மற்றும் மாண்டலின் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இதற்கு துணையாக டெரெக் மெக்ஆர்தரின் பாஸ் கிதார், பாடல் இசையமைப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.
இசை அடுக்குகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலால் 'ரதியே ரதியே...' பாடல் இசை ஆர்வலர்கள் மற்றும் காதலர்களுக்கு பிடித்த பாடலாக மாறியுள்ளது. இந்தப் பாடல் பாரம்பரியம், உணர்வு மற்றும் புதுமை ஆகியவற்றின் சரியான கலவையாகும்.
எம். சுந்தர் இயக்கத்தில் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தை பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார்.
நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.
விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது:
“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.
இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.
இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து பிரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .
சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. "நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை" என்று தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது.
அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை பார்வையிடுகிறார்.நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்!
அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க. அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கு.
படம் முழுவதும் வித்தியாசமான சினிமாட்டோகிராபி இருக்கு – கிரீஷ் கங்காதரன் படம் முழுவதிலிருந்தும் 40% வேலை செய்தார், பின் அவர் 'கூலி' படத்துக்காக சென்றுவிட்டார். மீதியை ஜோமோன் சுட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம்.
விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகுழ்ச்சியை தருகிறது.”
விழா முடிந்ததும், விஜய் தேவராகொண்டா ஊடக நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, அன்பும் நன்றியும் தெரிவித்து, அனைவரோடும் நெருக்கமாக பழகினார்.
ஜூலை 31, 2025, அன்று வெளியாகவுள்ள “கிங்டம்”, அதிரடி மற்றும் உணர்வுகளின் மாபெரும் கலவை. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும். இப்படம், சிறந்த தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்டு, திரையரங்கில் விருந்தாக அமையும்.
அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!
திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும்.
இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாகும். “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை YouTube-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களிலும் இப்படத்தை காண முடியாது.
அமீர் கான் இன்று தனது சூப்பர்ஹிட் திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை, ஆகஸ்ட் 1, 2025 முதல் YouTube-இல் பிரத்தியேகமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய அதிரடி நடவடிக்கை, 2025 இன் மிகவும் வெற்றிகரமான திரையரங்க வெளியீடுகளில் ஒன்றை, நேரடியாக மக்களின் வீடுகளுக்கு வழங்கும் ஒரு துணிச்சலான புதிய விநியோக அணுகுமுறையைக் குறிக்கிறது. நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்துள்ள இந்த மனதைக் கவரும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இந்தியாவில் ரூ. 100 விலையிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 சர்வதேச நாடுகளில், அவர்கள் நாட்டின் சந்தைக்கேற்ற விலையிலும் கிடைக்கும்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் சீக்குவலாக உருவான அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அசத்தலான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக, அனைவராலும் கொண்டாடப்பட்டது. உலகளவில் ₹250 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்தது. பார்வையாளர்கள் இப்போது கட்டணம் செலுத்தி, படத்தை Movies on Demand இல் எடுத்து, ஒவ்வொரு வீட்டையும் ஒரு தியேட்டராக மாற்றலாம்.
இது பிரீமியம் சினிமாவை பரந்த பார்வையாளர்களுக்கு, அவர்கள் வீட்டிலோ அல்லது பயணத்திலோ அணுகக்கூடியதாக ஆக்குகிறது - அவர்களுக்குத் தேவையானது இணைய இணைப்பு மட்டுமே. திரையரங்குகளில் தவறவிட்ட அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இது உயர்தர, வசதியான விருப்பத்தை வழங்குகிறது. இந்தியாவிலும் உலகளவில் இன்னும் பரந்த மற்றும் புதிய பார்வையாளர்களை அடைய, “சித்தாரே ஜமீன் பர்” முக்கிய மொழிகளில் வசன வரிகள் மற்றும் டப்பிங் சேவைகளையும் வழங்கும்.
இந்த முயற்சியின் சிறப்பம்சங்கள்:
இணையம் இருந்தாலே போதும் – எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். திரையில் பார்த்தவர்கள் மீண்டும் பார்ப்பதற்கும், மிஸ் செய்தவர்கள் இப்போது அனுபவிப்பதற்கும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழுடன் பல முக்கிய மொழிகளில் வசனங்கள் (Subtitles) மற்றும் டப்பிங் வசதி வழங்கப்படுகிறது. Aamir Khan Productions-இன் பல படங்களும் எதிர்காலத்தில் YouTube-இல் இதே மாதிரியான முறையில் வெளியாகும்.
இந்த முக்கிய அறிவிப்பு, YouTube, அணுகலை ஜனநாயகப்படுத்துவதிலும், விநியோக உத்திகளை உருவாக்குவதிலும், சீரியலுக்கு பின்னால் திரைப்படம் மற்றும் ஊடக உள்ளடக்கத்திற்கான முதன்மையான இடமாக YouTubeஐ நிறுவுவதிலும், டிஜிட்டல் உலகில் அதன் வளர்ந்து வரும் பங்கையும் நிரூபிக்கிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் YouTubeஐ பயன்படுத்துவது மிக எளிதான மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. காம்ஸ்கோரின் கூற்றுப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இந்தியாவில் 5 இணைய பயனர்களில் 4 பேரை YouTube அடைந்துள்ளது, அதே நேரத்தில் YouTube இல் பொழுதுபோக்கு வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டில் உலகளவில் தினசரி 7.5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்பட வெளியீடு குறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறுகையில்..,
"கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன். இறுதியாக அதற்கு மிகசரியான நேரம் வந்துவிட்டது. நமது அரசாங்கம் UPI-ஐ கொண்டு வந்தவுடன், மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது, இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெரும்பாலான சாதனங்களில் YouTube இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும். சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க குரல்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக நான் பார்க்கிறேன்."
YouTube India இயக்குநர் குஞ்ஜன் சோனி கூறியதாவது…
"சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை YouTube இல் பிரத்தியேகமாக டிஜிட்டல் முறையில் வெளியிடுவது, இந்திய திரைப்பட விநியோகத்தை உலக அளவில் ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. YouTube ஏற்கனவே பிரீமியம் உள்ளடக்கத்திற்கான ஒரு முக்கிய டிஜிட்டல் இலக்காக உள்ளது, மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்களுக்கு எங்கள் இணையற்ற டிஜிட்டல் அணுகலை மட்டுமல்லாமல், அவர்கள் இருக்கும் இடத்தில் தங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய வெளியீடு ஒரு வெளியீடாக மட்டுமல்லாமல் - இந்திய சினிமா உலக அரங்கில் முன்னேற YouTube சிவப்பு கம்பளம் விரிக்கிறது."
பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச ஹிட் திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழிகள், வகைகள், திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வகையில், YouTube ஏராளமான திரைப்படங்களை வழங்குகிறது. இணைய ஊடுருவல், இணைக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் விரைவான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மொபைல் நுகர்வு ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புடன் இந்த சலுகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உண்மையில், இணைக்கப்பட்ட தொலைக்காட்சி (CTV) இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக YouTube இன் வேகமாக வளர்ந்து வரும் திரையாகும். பிரீமியம் உள்ளடக்கத்தை ஒவ்வொரு திரையிலும் ஒவ்வொரு வடிவத்திலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான YouTube இன் தனித்துவமான நிலையை இந்தப் போக்குகள் வலுப்படுத்துகின்றன.
டீஸர்கள், டிரெய்லர்கள் மற்றும் இசையுடன் ஆரம்ப பரபரப்பை ஏற்படுத்துவது முதல், இப்போது தடையற்ற ஆன்-டிமாண்ட் ஸ்ட்ரீமிங் வரை விரிவடைந்து வரும் ஒரு திரைப்படத்தின் முழு பயணத்திலும் இந்த தளம் ஒரு முக்கியமான மற்றும் தொடர்ச்சியான பகுதியாகும். காந்தார் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பார்வையாளர்கள் பொழுதுபோக்குத் துறையில் புதிய வாங்குதல்களைக் கருத்தில் கொள்ளும்போது பெரும்பாலும் YouTube இல் வீடியோக்களைப் பார்க்கிறார்கள், மேலும் YouTube இசையில் (94%) மற்றும் பொழுதுபோக்கு (94%) ஆகியவற்றில் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பார்வையாளர்கள் அதிக பங்கேற்பாளர்களாக மாறும்போது, YouTube இல் உள்ள ரசிகர்கள் உள்ளடக்கத்தில் சிறப்பானதை உருவாக்க உதவுகிறார்கள், இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஈடுபாடு மற்றும் ஆர்வமுள்ள ரசிகர் கூட்டங்களை உருவாக்க அனுமதிக்கிறது.
திவி நிதி சர்மா எழுத்தில், அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில், பத்து புதிய முகங்களுடன் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். அடுத்து, சன்னி தியோல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிக்கும் 'லாகூர் 1947' படத்தையும், ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ஏக் தின்' படத்தையும் தனது ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆமிர் கான் தயாரித்து வருகிறார்.
சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'
இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நபி நந்தி, ஷரத், "லப்பர் பந்து" ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.
சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி.
ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது… ,
"எங்கள் ZEE5 சந்தாதாரர்களுக்கு 'மாமன்' திரைப்படத்தைப் பிரத்தியேகமாகக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் குடும்ப உறவுகளின் பாசம் அன்பு மற்றும் சிக்கலான உணர்வுகளின் கலவையாக, பார்வையாளர்கள் விரும்பும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். இதன் பிளாக்பஸ்டர் திரையரங்க வெற்றியே அதற்குச் சான்றாகும். ZEE5 தளத்தில் இப்படம் உற்சாகமான வரவேற்பைப் பெறும், நாடு முழுவதும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்."
OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டதாவது..,
“மாமன்” என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை. இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழுப்பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்.”
தனது நுட்பமான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சூரி பகிர்ந்துகொண்டதாவது…,
"உண்மையான வெற்றி என்பது, உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாகப் பாராட்டுவதில் உள்ளது, மேலும் 'மாமன்' திரைப்படம் அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மையில் நடந்த சம்பவங்களின் உணர்ச்சிப்பூர்வமான பயணம், மேலும் இது எத்தனை பேரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு துடிப்பான படமாகத் திறமையாக உருவாக்கிய இயக்குநர் பிரசாந்திற்கு எனது மனமார்ந்த நன்றி. 'மாமன்' ZEE5 இல் ஸ்ட்ரீமாவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்தக் கதையைப் பார்த்து அனுபவிக்கவும், தங்கள் சொந்த பிணைப்புகளைப் போற்றவும் முடியும்."
அற்புதமான நடிப்பு, மனதைத் தொடும் தருணங்கள் என “மாமன்” திரைப்படம், குடும்ப உறவுகளின் நெகிழ்ச்சியான, உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும்.
இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை ZEE5 இல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் பிரத்தியேகமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய முந்திய படங்களான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நான் ரசிகன். ‘பிளாக்மெயில்’ திரைப்படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. அனைத்து வயதினரும் தங்களுடன் இந்தப் படத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் மாறன் தெளிவாக எழுதியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். குறைந்த நேரம் வரக்கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்” என்றார்.
தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அவரைப் போல நிறைய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. படத்திற்கு தேவையான பணம் மட்டுமே கொடுப்பது இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆர்வம் காட்டினார். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இந்த குணத்தை அவரிடம் பார்த்து வியந்தேன். எந்த ஒரு சவால் வந்தாலும் படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்”.
தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி பேசும்போது, “திரையில் மிகவும் திறமையாக தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கொண்டு வருபவர் நடிகை பிந்து மாதவி. ’பிளாக்மெயில்’ படத்தில் வலுவான கதாபாத்திரம் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தேஜூ அஸ்வினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் இதற்கு முன்பு இவரை இப்படி பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்ரீகாந்த் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.
ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!
விஜய் தேவராகொண்டா நடித்துள்ள "கிங்டம்" படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது.
ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் 'சூரி' மற்றும் சத்யதேவின் 'சிவா' இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.
விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும் திரைமேடையில் அவரது நம்பிக்கையான உலாவல் அனைத்தும் இந்த ட்ரைலரில் நமக்கு அறிமுகமாகின்றன. இது திரையில் அவர் தரவுள்ள பெரிய விருந்து என்னும் அடையாளமாக அமைகிறது.
கவுதம் அவர்களின் தனித்துவத்தையும் , கதை சொல்லும் மென்மையையும் மிகச் சிறந்த உணர்வுகளுடன் இணைத்து வழங்கியுள்ளார். எடிட்டர் நவீன் நூலி அவர்களின் கூர்மையான எடிட்டிங் வேலை ட்ரைலரை மேலும் வலுப்படுத்தி, பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே "அண்ணா அந்தனே", "இதயம் உள்ளே வா" போன்ற ஹிட் பாடல்களை வழங்கிய அனிருத், இந்தப் படத்திலும் தனது பாக்ஸ்கிரவுண்ட் ஸ்கோரை வைத்து ஒவ்வொரு காட்சியையும் பறக்க வைக்கிறார். கதையின் உணர்வுகளுக்கும், ஓட்டங்களுக்கும் இசை வழிகாட்டியாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு - ஜோமன் T. ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன் படத்தொகுப்பு - நவீன் நூலி
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் என்ற மூன்று நிறுவனங்களின் சார்பில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.
ஜூலை 31 – வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் பிறக்கப்போவது உறுதி!
படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், "இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, 'உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்' என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு காளி வெங்கட்டை மிகவும் பிடிக்கும். அவருக்கும் தர்ஷன் பிரதருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நன்றி! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போல இந்த படத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது".
எடிட்டர் நிஷார் ஷெரிஃப், "'ஹவுஸ் மேட்ஸ்' எனக்கு முதல் படம். முதல் படம் எப்போதுமே ஸ்பெஷல். இயக்குநர், நடிகர்கள் என எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான். தயாரிப்பாளர் விஜய பிரகாஷூக்கு நன்றி. எல்லாமே எங்களுக்கு செய்து கொடுத்தார். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
ஒளிப்பதிவாளர் சதீஷ், "எனக்கும் இது முதல் படம். டிரெய்லரில் பார்த்ததை விட இன்னும் சிறப்பான பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். நன்றி".
கலை இயக்குநர் ராகுல், " ஒரு வெற்றி இன்னொரு வெற்றியை தேடி தரும் என்று சொல்வார்கள். அப்படித்தான் 'பார்க்கிங்' பட வெற்றி மூலம் இந்த பட வாய்ப்பு எனக்கு வந்தது. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த படம் செய்து இருக்கிறோம். இதில் பணியாற்றியது மகிழ்ச்சி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".
நடிகர் அப்துல் லீ, "நான் இதற்கு முன்பு நடித்த 'கேப்டன் மில்லர்', 'இரும்புத்திரை' போன்ற படங்களில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றும்படி முக்கியமானதாக இருக்கும். அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் 'ஹவுஸ் மேட்ஸ்' படத்திலும். பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கும் எனக்கும் நல்ல ராசி இருக்கிறது. இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காளி வெங்கட் அண்ணா நான் நடிக்க நுழைந்த சமயத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன். தர்ஷனை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகை வினோதினி, " இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும்".
பாடலாசிரியர் மோகன் ராஜன், "'குடும்பஸ்தன்', ''டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்குப் பிறகு இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வருடத்தில் எனக்கு அமைந்த மற்றொரு நல்ல படம். சிவகார்த்திகேயன், தர்ஷன், காளி வெங்கட் இவர்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிச்சயம் 'ஹவுஸ்மேட்ஸ்' உங்களால் மறக்க முடியாத படமாக இருக்கும்".
இசையமைப்பாளர் ராஜேஷ் குமரேசன், "படத்தின் கதை கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டேன். நிச்சயம் படம் உங்களுக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள்".
புரொடியூசர் விஜய பிரகாஷ், "ராஜவேலும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போது சண்டை போட்டதில்லை. ஆனால், படம் எடுக்கும்போது நிறைய சண்டை போட்டோம். சக்திவேல் உள்ளே வந்ததும் டீம் செட் ஆகி படம் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு சாந்தி டாக்கீஸ் அருண் ப்ரோ பார்த்தார். பின்பு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். படத்திற்கு எல்லா விஷயங்களையும் பார்த்து செய்த சிவகார்த்திகேயன் & டீமுக்கு நன்றி. ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை".
இயக்குநர் ரவிக்குமார், "இந்தப் படத்தை பார்க்க SK நட்பு ரீதியில் அழைத்த போது சென்று பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது இயக்குநரிடம் வெற்றி படம் கொடுத்திருக்கிறீர்கள் என்று வாழ்த்தினேன். டிரெய்லரை விட படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். SK புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுவது படக்குழுவினருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் அஜய் ஞானமுத்து, "படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடக்க்ஷன் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது"
SK புரொடக்சன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு, " நல்ல கன்டென்ட் மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் 'கனா' படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது 'ஹவுஸ் மேட்ஸ்' எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி என்டர்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகை ஆர்ஷா பைஜூ, " தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேல் அண்ணனுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை".
இயக்குநர் ராஜவேல், " இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகர் காளி வெங்கட், "எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. ஆகஸ்ட் 1 அன்று படம் பாருங்கள்".
நடிகர் தர்ஷன், "இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்" என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா