சற்று முன்

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |   

சினிமா செய்திகள்

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி
Updated on : 11 February 2019

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை  நடக்கும். 2019-2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நேற்று (10.02.2019) காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.



தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் திரு.பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு.K.V.கன்னியப்பன், திரு.முனீர் அகமது,திரு.கஸ்தூரி மூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.



பின்னர், திரு.பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். அதன் படி வெற்றி                                  பெற்ற வேட்பாளர்கள் விபரம்.



தலைவர்                    - திரு.P.C.ஸ்ரீராம்



துணை தலைவர்கள்    - திரு.A.கார்த்திக் ராஜா



          திரு.S.சரவணன்    



 பொதுச்செயலாளர்    - திரு.B.கண்ணன்



துணை செயலாளர்கள்  -   திரு M.இளவரசு



                                -  திரு. A .ஆரோக்கியதாஸ்



- திரு.U.K.செந்தில் குமார்



பொருளாளர்              -  திரு.B.பாலமுருகன்     



மற்றும் செயற்குழு பதவிக்கு 15 பேர் தேர்தெடுக்கப்பட்டனர்.



இந்த தேர்தலில், தலைவர்.திரு.பி.சி.ஸ்ரீராம், உப தலைவருக்கு போட்டியிட்ட திரு.கார்த்திக் ராஜா, திரு.சரவணன் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



வெற்றி பெற்ற அணைத்து பொறுப்பாளர்களுக்கும் இன்று காலை



வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் தேர்தலை சிறப்பாக நடத்திக்கொடுத்த தேர்தல் அதிகாரிகளுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் தலைவர். திரு.பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் திரு.B.கண்ணன் இருவரும் நன்றி தெரிவித்தனர்.



 



செயற்குழு உறுப்பினர்கள்



1. அஜயன் வின்சென்ட்



2. N.K.ஏகாம்பரம்



3. N.அழகப்பன்



4. D.கண்ணன்



5. K.ரவிஷங்கரன்



6. J.லஷ்மண் குமார்



7. J.ஸ்ரீதர்



8. M.வெற்றிவேல்



9. A.வினோத் பாரதி



10. S.ஆர்ம்ஸ்ட்ராங்



11. V.இளம்பருதி



12. P.காசிநாதன்



13. G.முருகன்



14. C.தண்டபாணி



15. S.அருண்குமார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா