சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் - கவிஞர் வைரமுத்து
Updated on : 15 February 2019

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.



இதோ அந்தக் காதல் பாட்டு :



மழையில்லை மேகமில்லை – ஆயினும்

மலர்வனம் நனைகின்றதே                                                                                 

திரியில்லை தீயுமில்லை – ஆயினும்                                                     

திருவுடல் எரியுண்டதே



ஒருவரின் சுவாசத்திலே

இருவரும் வாழுகின்றோம்

உடல் என்ற பாத்திரத்தில்

உயிர்ப்பொருள் தேடுகின்றோம்



காற்றில் ஒலிபோலே

கடலில் மழைபோலே

இருவரும் ஒருவரில் ஒன்றினோம்



*



பூக்கள் ஒன்றுதிரண்டு                                      

படைகூட்டி வருவதுபோல்                                        

இன்பம் ஒன்றுதிரண்டு

என்மீது பாய்கிறதே



என் ஆவி பாதி குறைந்தால்

என் மேனி என்னாகும்?

ஆகாயம் அசைகிறபோது

விண்மீன்கள் என்னாகும்?



தரையில் கிடந்தேனே

தழுவி எடுத்தாயே

தலைமுதல் அடிவரை நிம்மதி



*



பண்ணும் தொல்லைகளெல்லாம்                                                                                       

துன்ப வாதை செய்கிறதே                             

இன்னும் தொல்லைகள் செய்ய   

பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே



திறக்காத ஜன்னல்கள் எல்லாம்

திடுக்கிட்டுத் திறக்கிறதே

எனக்குள்ளும் இத்தனை அறையா

எனக்கின்று புரிகிறதே



மழையில் தலைசாயும்

இலையின் நிலைபோல

எனதுயிர் உன்வசம் ஆனதே

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா