சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

தன்வந்திரி பீடத்தில்கி ராம தேவதா வழிபாடு
Updated on : 20 February 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இன்று 19.02.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கலிட்டு படையலிடும் வைபவமும், கிராம தேவதா பூஜையும் நடைபெற்றது.



 



ஸ்ரீ முனீஸ்வரரின் சிறப்பு:



ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் ஸ்ரீ முனீஸ்வர்ரை இந்துக்கள் முக்கிய தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வருகிறார். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்முடைய நம்பிக்கையாகும். முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.



 



வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரருக்கும், நவகன்னிகைகளுக்கும் மஹா அபிஷேகத்துடன் பொங்கல் வைத்து படையலிட்டு பிராத்தனை செய்யப்பட்டது. இந்த பூஜையானது வருகிற 22.02.2019வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் பந்தக்கால் முஹூர்த்தத்திற்கும் மார்ச் மாதம்13 முதல் 17 வரை நடைபெற உள்ள 15 ஆம் ஆண்டு விழாவும், 16 திருக்கல்யாணமும், ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவும், 1000 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியும், இதர வைபவங்களும் தடையின்றி நடைபெற நடைபெற்றது. இந்த பூஜையில் திருமணம் நடைபெற வேண்டி வந்திருந்த ஆண், பெண் பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி வந்திருந்த தம்பதிகள், சாந்தி பூஜையில் பங்கேற்ற நபர்கள் கலந்து கொண்டனர். இப்பூஜையானது பக்தர்கள் முனீஸ்வரர், நவகன்னிகைகள் மற்றும் கிராம தேவதா அருள் பெற்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் பெற்றும் ஆனந்தமாக வாழ நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா