சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

YNOT ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தை
Updated on : 20 February 2019

YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து "YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்" என்ற திரைப்பட மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவையை துவங்கியுள்ளனர். திரைப்பட வணிகத்தின் ஆக்கப்பூர்வமான, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான, மற்றும் செல்வாக்குமிக்க திரைப்பட ஜாம்பவான்களின் கூட்டணியாக இந்த முயற்சி திரைப்பட வர்த்தகத்தில் தங்களது முதல் அறிவிப்பை வெளியிடுகிறது.



YNOT ஸ்டூடியோஸ், எஸ். சசிகாந்த், அவர்கள் கூறுகையில் - "YNOTX தரம் மிகுந்த திரைப்படங்களின் விநியோகம் மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த தளம் ஒன்றை உருவாக்கும். சிறந்த படங்களுக்க ஒரு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்தி அதற்கான வடிவமைப்பை உருவாக்க உதவும்.



தங்கள் படங்களின் வருவாய் திறனை அதிகரிக்க விளம்பரம், விநியோகம் மற்றும் டிஜிட்டல் பகிர்வில் பல்வேறு கூட்டணி நிறுவனங்களுடன் ஒன்றினைந்து, படத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை உருவாக்குகிறோம்" என்றார்.



ஷிபாஷிஷ் சர்கார், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி, கூறுகையில் "பல தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் படங்களை தங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு சரியான தளங்களைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றன. ஏனென்றால் சரியான தளங்களைக் கண்டுபிடிக்க சில வழிகளே உள்ளன, மேலும் பல தயாரிப்பாளர்கள் அந்த சில வழிகளையே பின்பற்றுவதால் பிரச்சனை மேலும் சிக்கலாக்கி பட வெளியீட்டு நேரத்தில் ஒரு தெளிவின்மையை ஏற்படுத்துகிறது. 



YNOTX இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கும், பன்மொழி திரைப்படங்களின் விளம்பரம் மற்றும் விநியோகம் இன்னும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி அதை சரியே பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது. " என்றார்



ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவீந்திரன் கூறுகையில் "சரியான பாதையை சரிவர காட்டாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போதைய திரைப்பட வணிகம் உள்ளது. மேலும் திரைப்படங்களின் விநியோகங்களில் ஒரு சமநிலையின்மை இருப்பதை காணமுடிகிறது. இது போன்ற வணிக ரிதியிலான குழப்பங்களுக்கு சிரியான தீர்வாக நன்கு அனுபவம் வாய்ந்தவர்களும், மிகவும் திறன் வாய்ந்தவர்களும் உள்ள இந்த  ஒருங்கிணைந்த குழு அமையும். " என்றார்.



AP இன்டர்நேஷனல், சஞ்சய் ஏ. வாத்வா கூறுகையில் - "பல்வேறு விநியோக தளங்கள் தங்கள் தேவைகளுக்கு பொருந்தும் சரியான படைப்புகளை கண்டுபிடிப்பதற்கான செயல்முறையைப் பெற மெனக்கேட வேண்டிய நிலை இங்கு உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பலரின் எண்ணிக்கையும், மேலும் தங்களுக்கான தேவைகளை அறிவதில் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு வழியை கையாலுவதுமே இதற்கு காரணமாகத் திகழ்கிறது.



YNOTX, படைப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றி வரும் சிக்கலான வழிகளை உடைதெறிந்து சிறந்த நேர்த்தியான வழியில் தரமான படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்க்கும், வணீக ரிதியாக உதவுவதற்க்கும் வழிவகுக்கிறது



விநியோக வியாபாரத்தில் 12 வருட அனுபவம் கொண்ட திரு. கிஷோர் தலூர், YNOTXல்  விநியோக தலைமை பொருப்பில் வகிப்பார்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா