சற்று முன்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |   

சினிமா செய்திகள்

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
Updated on : 14 April 2015

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களில் புதுமையை தரும் இயக்குனர் ஜனநாதன் இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் வர்ஷன் அறிமுகப்படுத்துகிறார்.


படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்தில் வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.


லண்டன் டிரிநிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்திய பாரம்பரிய இசையை சென்னை இசை கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்கு பிடித்திருந்தது எனக்கு ‘‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வூறு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவில் வைத்துகொண்டு இசையமைத்தேன். படத்தின் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது.


“ஒரு இயக்குனரிடம் வேலை புரிவது மிகவும் புதிதாக இருந்தது. ஒரு தனித்த இசை கலைஞனாய் வேலை செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு இசையமைப்பாளர் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும். ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’  திரைப்படம் என்னை ஒரு இசையமைப்பாளராய் மேலும் மெருகேற்றியது. படத்தின் இசை 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தன்னிசையைப் போல் இனிமையுடன் கூறினார் இளம் இசையமைப்பாளர் வர்ஷன்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா