சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

காதலின் சாராம்சம் நிறைந்த சில்லு கருப்பட்டி
Updated on : 21 February 2019

'சில்லு கருப்பட்டி' வெங்கடேஷ் வெலினேனி தயாரிப்பில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கும் படம் 





இந்த படத்தின் சிங்கள் ட்ராக் "அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு" என்ற அழகான பாடல் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. 



 



பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, "காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை.



 



 



பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி" என்கிறார். 



 





ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலை, கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார் பாடியிருக்கிறார். 



 





நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட ஆழமான காதல் கதை தான் 'சில்லு கருப்பட்டி'.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா