சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சேரனா இப்படி! அதிர்ந்து போன விநியோகஸ்தர்கள்
Updated on : 23 February 2019

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.. அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.



 



சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம்.



 



காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது 'ராஜாவுக்கு செக்.' அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.



 



சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் பிரதி முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக்.. காரணம் படம் முழுவதும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு பாணியில் இருந்ததுதான். சேரனோ சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும் தானாம். 



 



குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும் த்ரில்லும் இருந்துகொண்டே இருந்ததாம்.  மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட  திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக...



 



இந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்.. 



 



நல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை 'ராஜாவுக்கு செக்' என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா