சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

கார்த்தியின் அடுத்த படம் ஆரம்பம்
Updated on : 24 February 2019

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில்  

S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் கார்த்தி நடிக்கும் புதிய படம்  “K19”  என்கிற பெயர் சூட்டப்படாத படம்.





இந்தப் படத்தில் நடிகை ரஷ்மிகா மண்டன்னா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த 'கீதா கோவிந்தம்' படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதை தொடர்ந்து , கார்த்தி-க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார். 





இந்த படம் மோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.





இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றி வருகிறார். நிர்வாக தயாரிப்பு அரவிந்த்ராஜ் பாஸ்கரன். முதற்கட்ட பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது இப்படக்குழு. படப்பிடிப்பு மார்ச் 2-ம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது. 





'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' போன்ற படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களை மிக கச்சிதமாக செய்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது, 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெயரிடப்படாத “K18” படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா