சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

'தலைவி' தலைப்பை பெறும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்
Updated on : 25 February 2019

 



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். அதில் இயக்குநர் விஜயுடம் ஒருவர். இவர் இயக்க இருக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



 



ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் இருந்து இப்படத்திற்காக என்.ஓ.சி பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 





 





 



     



    





 



 



இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “’தலைவி’ என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இந்த குணாதிசயங்களால் தான் நாம் அனைவரும் அவரை 'அம்மா' என்று வணங்குகிறோம். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.



 



இந்த 'தலைவி' தலைப்பை வெளியிட அவரது பிறந்த நாளை விட மிகச்சரியான தருணம் ஏதும் இல்லை. எங்களுக்கு இந்த படத்தை உருவாக்க தடையில்லா சான்று கொடுத்த ஜெயலலிதா அம்மா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்கான கதை ஐடியாவை கொண்டு வந்ததோடு, இன்றும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் விப்ரி மீடியா தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி. அர்த்தமுள்ள மற்றும் நேர்மையான வாழ்க்கை வரலாற்று படங்களை கொடுக்கும் அவரது நோக்கம் எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை ரசிகர்கள் பொக்கிஷமாக நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார்  என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். என் படங்களில் மிகச்சிறந்த ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா