சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு இளைஞனின் கதை ‘மாயநதி’
Updated on : 26 February 2019

 ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில்

நடித்த அபி சரவணன், காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய

படங்களில் நடித்த வெண்பா இருவரும் இணைந்து நடிக்கும் படம்  ‘மாயநதி’. 



 





மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



 



  

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து இயக்கும் படம். 



 





இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’.



 





பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்.



 





இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். 



 



பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.



 



இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை, பொறையாறு,தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா