சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
Updated on : 26 February 2019

ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கும் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு".  கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.



 



இந்த படத்தின் கதாநாயகன் மகேந்திரன், ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்க்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என இயக்குனர் கூறுகிறார்.



 



மகேந்திரனுக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.



 



ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே,,  படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி கவனிக்க, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குனராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளனர். பாடல்களை   ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ்,  ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேனிசைத் தென்றல் தேவாவும் பாடல்களைப் பாட, ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். 





அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.





தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா