சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

திருநங்கைகள் மற்றும் புர்கா அணிந்த பெண்கள் மூலம் இயங்கும் மக்கள் ஆட்டோ சேவை
Updated on : 27 February 2019

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி சேவையை துவக்கிவைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தியாவின் பசுமை மனிதர் அப்துல் கனி, மக்கள் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் யாஸ்மீன் ஜவஹர் அலி, மக்கள் ஆட்டோ ஆலோசகர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



 



மக்கள் ஆட்டோ சேவையில் பெண் ஓட்டுனர்கள், திருநங்கை ஓட்டுனர்கள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள், ஆண் ஓட்டுனர்கள் உள்ளனர்.  தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்து சவாரி செய்யும் வசதியை மக்கள் ஆட்டோ வழங்குகிறது.



 



எஸ்.எம்.எஸ். மூலம் OTP பெற்று ஆட்டோவில் பயணிக்கலாம்.



 



மொபைல் ஆப் மூலமாகவும் புக்கிங் செய்யலாம். நேரடியாக கால் செண்டருக்கு 044 - 43214321 என்ற எண்ணுக்கு போன் செய்தும் பயணிக்கலாம்.



 



M ஆட்டோ ஆப்பில் அவசரகால உதவிக்கு தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, அலுவலகம் செல்வோர், பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. முழுமையான பாதுகாப்பான பயணத்தை M ஆட்டோவில் பெண்கள் உணரமுடியும். பிளே ஸ்டோரில் இருந்து M Auto App டவுன்லோட் செய்துகொள்ளலாம்.



 



அரசு நிர்ணயித்த மீட்டர் 



 



கட்டணம் மட்டுமே மக்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.



 



சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் மக்கள் ஆட்டோ சேவை வழங்கப்படுகிறது.



 



தமிழகம் முழுவதும் 50 லட்சம் பயணிகள் மக்கள் ஆட்டோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்களுக்கான சேவையை மக்கள் ஆட்டோ விரிவுபடுத்தி உள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா