சற்று முன்
சினிமா செய்திகள்
ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை
Updated on : 30 July 2019

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “.
இந்த படத்தில் வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.
சமீபத்திய செய்திகள்
சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி
ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்
இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டது தான் காயல் திரைப்படம். நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்த காயல் திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறேன்.
விழாவில் பேசிய இயக்குனர் தமயந்தி
இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் ஆண்கள் பக்கம் மட்டுமே அதிகம் இருப்பதைப்போன்று திரைப்படங்களும் , படைப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் பெண்களிடம் மிக மிக அதிகம் இருக்கின்றது. காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திசெல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் காயல். இந்தக்கதை திரைப்படமாவதற்கு தயாரிப்பதற்கு முன் வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களுக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும். படத்தின் கதாநாயகன் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாசகா, ஐசக் , ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தில் சிறப்பானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள் என்றார்.
விழாவில் பேசிய நடிகர் லிங்கேஷ்
இந்தப்படம் மிக முக்கியமான படம் எனது கேரியரில் , கதாநாயகனாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யும் பொழுதே இந்தப்படம் என்ன மாதிரியான அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தும், நமது பங்களிப்பு இந்த படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் தமயந்தி அவர்கள் இந்தக்கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். அதுவும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன். ஒரு பொறுப்பானபடத்தில் நடித்த திருப்தி இருக்கிறது என்றார்.
விழாவில் பேசிய நடிகை அனுமோல்
தமயந்தி இந்த கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு முன்னாடியே சொல்லிவிட்டார், அப்போது நான் மலையாள படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று, அதன்பிறகு சொன்னதைப்போலவே படம் துவங்கும் நேரத்தில் சொன்னது போல நடிக்க வந்துவிட்டேன். பெரும்பாலும் படப்பிடிப்பு கடற்கரை ஒட்டிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் எங்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் ஒரு பயணம் செய்யும் அனுபவத்தை தந்தது. இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் அதைவிட இப்படி பெண்களின் உண்மையான மனங்களில் இருக்கும் இன்னொரு பக்கத்தை சொல்ல துணிந்து சொல்லியிருக்கும் இயக்குனர் தமயந்திக்கு எனது பாராட்டுக்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கிமருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகை ஸ்வாதகா, நடிகர் ஐசக், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தை தயாரித்துள்ளார்.
விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.
'புல்லட்' படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர்.
எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி இப்படத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் தடம் பதிக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி 'புல்லட்' படத்தில் மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'புல்லட்' படப்பிடிப்பு சென்னை, தென்காசி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது ஒரு முழு நீள அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது. இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’, ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை பேண்ட்டம் பிரதீப் வடிவமைத்துள்ளார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் 'புல்லட்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!
பர்தா’ திரைப்படம் த்ரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது டிரைய்லரின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரைய்லரில் பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி விசாலப்படுத்தினார்கள் என்பதை சொல்கிறது. கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் தனிமனிதரின் உணர்வுகளுக்கும் இடையிலான உரையாடலையும் படம் எடுத்துரைக்கிறது.
‘சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி இருக்கும் ‘பர்தா’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டாயப்பட்டுத்தப்படுகிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் விதி மாறுகிறது. சுப்புவின் வாழ்வை சுற்றி இருக்கும் ’பாரம்பரிய’ சுவர்களை உடைக்க அவர்களை உதவுகிறார்கள்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையாக ‘பர்தா’ இருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக பெண்களை கட்டிவைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை ‘பர்தா’ விமர்சிக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமை, மாற்றத்திற்கான முன்னேற்றம் ஆகியவற்றையும் தைரியமாக பேசும் கதைக்களமாக ‘பர்தா’ உருவாகியிருக்கிறது.
'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர்.
'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர்.
பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். ரொமான்ஸ், பாஸ் கிதார், வயலின் என இந்தப் பாடலின் ரிதம் சரியான வகையில் அமைந்துள்ளது.
செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரஷாந்த் பொட்லூரி மற்றும் ஜாம் வர்கீஸின் ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று 'காந்தா' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது, “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து ’குற்றம் புதிது’ படத்தின் கதை சொன்னேன். கதை பிடித்ததும் முழு மனதோடு படத்தைத் தயாரிக்கவும் சம்மதித்தார். நடிப்பு, பயிற்சி, சண்டை மற்றும் நடனம் என சினிமாவிற்காக தருண் விஜய் முழு பயிற்சி பெற்றிருக்கிறார். சேஷ்விதா கனிமொழி கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். உணவு டெலிவரி செய்யும் ஒரு இளைஞன் திடீரென்று தலையில் அடிபட்டு வினோதமான ஒரு பாதிப்புக்கு உள்ளாகிறான். அதன் பிறகு அவனது நடவடிக்கை மாறுகிறது. அவன் மீது கொலை பழி விழுகிறது. அந்த கொலையை ஹீரோ செய்தாரா?அவருக்குள் ஒரு மிருகம் இருக்கிறதா என்ற பல்வேறு திருப்பங்களுடன் இந்த கதை அமைந்திருக்கிறது. தருண் விஜய் இதில் கொரில்லா குணாதிசயம் கொண்டதுபோல் நடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. கொரில்லா குரங்கு போல் அவர் கைகளையும், கால்களையும் ஊன்றி ஊன்றி நடப்பது போல் மிகவும் கஷ்டப்பட்டு வலிகளை தாங்கி நடித்திருக்கிறார். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்” என்றார்.
கதாநாயகன் தருண் விஜய் கூறியதாவது, “என் வீட்டில் என் அப்பா , அம்மா, அக்கா எல்லோருமே டாக்டர் தான். என்னையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நான் நடிகனாக போவதாக வீட்டில் கூறினேன். முதலில் அவர்கள் அதற்கு தயக்கம் காட்டினார்கள். பின்னர் எனது இலட்சியத்தை, ஆசையை புரிந்து கொண்டு நடிக்க அனுமதி கொடுத்தார்கள். அதன் பிறகு நடிப்புக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை நான் முறைப்படி பயின்றேன். நல்ல கதைக்காக காத்திருந்த போதுதான் ’குற்றம் புதிது’ படக் கதையை இயக்குநர் நோவா கூறினார். அதில் நடிப்புக்கும், திறமையை வெளிப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றிருந்ததால் படப்பிடிப்பின்போது எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. இயக்குநர் எப்படி சொன்னாரோ அப்படியே நடித்தேன். சந்தேகம் ஏற்படும் போது அவரே நடித்துக் காட்டுவார். அதை உள்வாங்கி நான் நடிப்பேன். கொரில்லா குரங்கு போல் கை கால்களை ஊன்றி நடப்பதற்காக நான் மூன்று மாதம் பயிற்சி எடுத்தேன். கை விரல்களை மடக்கிக்கொண்டு தரையில் ஊன்றி கைகளை முன்னும் அசைத்து நடந்தபோது எனது தோள்பட்டையே வீங்கிவிட்டது. அந்த சிரமத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வலியை பொறுத்துக் கொண்டு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக 100% நடிப்பை வழங்கினேன். எனது நிஜப் பெயர் தருண். விஜய் என்ற பெயரை நானாகவே சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு வலிமை தரும் என்பதால் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி கூறியதாவது, “’குற்றம் புதிது’ படத்தில் கதாநாயகியாக என்னை நடிக்க அழைத்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம், இப்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வேண்டும், அதில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் நான் இன்ஸ்டாகிராமில் இல்லை. ஆனாலும் இயக்குநர் என்னை அழைத்து ஒரு காட்சியை சொல்லி நடித்துக் காட்ட சொன்னார். நடித்துக் காட்டினேன். அது அவருக்கு பிடித்துப் போகவே என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ’குற்றம் புதிது’ படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இது மாறுபட்ட படமாக இருக்கும். அனைத்து தரப்பினையும் இந்த படம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'
துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார் (Chandhu Salim Kumar),அருண் குரியன் (Arun Kurian), சாந்தி பாலச்சந்திரன் ( Shanthy Balachandran) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.
கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வேலூர் சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!
பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்.
சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார்.
தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் (Aravind Kaushik) இயக்குகிறார்.கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல டாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.
இப்படத்தின் மிக முக்கிய VFX காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன் (graphics studios) இணைந்து உருவாக்கப்படவுள்ளது. குறுகிய காலத்திற்குள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பை வழங்கி, தேசிய அளவில் கன்னட சினிமாவுக்கு புதிய அளவுகோலை அமைப்பதே படக்குழுவின் இலக்காகும்.
‘ஏ’, ‘உபேந்திரா’ (A, Upendra) , ‘ரக்த கண்ணீரு’ (Raktha Kanneeru) போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாரமும் கதை சொல்லும் பாணியும்,நெக்ஸ்ட் லெவல் (Next Level) படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ரோஸ், மாஸ் லீடர் (சிவராஜ்குமார் உடன்) Rose, Mass Leader (with Shivarajkumar) , விக்டரி 2( Victory 2), காகி( Khaki), சூ மந்தர் (Choo Mantar) போன்ற படங்களை தயாரித்த தருண் சிவப்பா ( Tarun Shivappa), தனது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்குகிறார். சூ மந்தர் படத்தில் பணியாற்றிய அனூப் கட்டுகரன், இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
வலுவான தொழில் நுட்ப குழுவும், வாகை சூடிய நட்சத்திர பட்டியலும் கொண்ட நெக்ஸ்ட் லெவல், திரைப்படம் சமீப காலத்தில் உருவாகும் மிக தனித்துவமான கன்னட படங்களில் ஒன்றாக இருக்கும்.
நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'
காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.
'காட் ஆஃப் தி மாஸஸ்' நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற 'அகண்டா 2 : தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா (Raam Achanta) மற்றும் கோபிசந்த் அச்சந்தா (Gopi Achanta) இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை, M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா (Samyuktha) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி ( Aadhi Pinisetty) இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும், கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா (Harshali Malhotra) ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.
மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு எடிட்டிங் செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.
படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.
காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!
இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவித்த “Wrap -Up” வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, கனகவதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் கதை, இந்திய பாராம்பரியத்தின் வேர்களைப் பற்றிய ஆழமான கதையைச் சொல்வதோடு, விஷுவலாக வேறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப் (Arvind S. Kashyap’s)உடைய கண்கவர் ஒளிப்பதிவும், B. அஜநீஷ் லோக்நாத் (Ajaneesh
Loknath) வழங்கியுள்ள ஆன்மாவை வருடும் இசையும், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூரின் ( Vijay Kiragandur) பிரம்மாண்ட தயாரிப்பும், இப்படத்தை இதுவரை இல்லாத பேரனுபவமாக உருவாகியுள்ளது.
“காந்தாரா அத்தியாயம் 1” உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது.
இன்றைய தினம் நாடு முழுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறும் நேரத்தில்,
உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெறவிருக்கும் கனகவதி பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா