சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர், ஆலியா பட் & இயக்குநர் அயன் முகர்ஜி இணைந்து வெளியிட்ட “பிரம்மாஸ்த்ரா பாகம் - 1”
Updated on : 21 December 2021

இந்தியாவின்  பிரம்மாண்ட படைப்பான  “பிரம்மாஸ்த்ரா”   வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,  உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிப்லிப்பை  ஒருங்கினைத்த திரை காவியமாக தரவுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.



 



டில்லியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், இளைஞர்களின் இன்றைய அடையாளமாக திகழும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இணைந்து, மோஷன் போஸ்டரை ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிட்டனர். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி 09.09.2022 எனவும் அறிவித்தனர்.



 



மோஷன் போஸ்டர் ரன்பீர் கபூரின் கதாப்பாத்திரமான சிவன் பாத்திரத்தை, பிரமிக்க தக்கவகையில், நெருப்புக்கு மத்தியில் போற்றும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



 



2022 ஆம் ஆண்டில் “பிரம்மாஸ்த்ரா”  படத்தினை  பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து  இயக்குனர் அயன் முகர்ஜி கூறுகையில்.., “கடந்த 10 வருடங்களாக என்னுள் வாழ்ந்த கதை இது. குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாட ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும், இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்தது போல் இல்லாத சினிமா அனுபவத்தையும், சாகசங்கள் நிறைந்த பயணமாகவும், உணர்வுப்பூர்வமான இதயம் நிறைக்கும் படைப்பாகவும், இப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாஸ்திரத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஒவ்வொரு காட்சியையும், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், உலகளாவிய பாப் கலாச்சார நிகழ்வுக்கு இணையானதாக உருவாக்கியுள்ளோம். பார்வையாளர்களை திரையரங்குகளில்  மீண்டும் உற்சாகத்துடன் பார்ப்பது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் அடுத்த சில மாதங்களில்  பிரம்மாஸ்திரா படத்தினை  எனது குழுவினருடன் இணைந்து பார்வையாளர்களுக்கு வழங்கும், ஒரு அற்புதமான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.



 



பிரம்மாஸ்திரா - டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட  திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் - அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது.  பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில்  இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.



 



Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில்,  இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா