சற்று முன்

அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |   

சினிமா செய்திகள்

'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
Updated on : 12 January 2025

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 



 



'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', ' ஃபர்ஹானா ' போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன்,  ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், 'பசங்க ' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் - சத்ய பிரகாஷ் - அனல் ஆகாஷ் - பிரவீண் சைவி - சஹி சிவா-  ஆகியோர் இணைந்து  இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார்.  ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார். 



 



படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில்,



'' திவ்யா - ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.‌ காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.  ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன்.  அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். '' என்றார். 



 



இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா