சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்
Updated on : 13 January 2025

'கள்ள நோட்டு 'படத்தின் நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது,வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி,   நாயகனின் நண்பனாக  நா. ரஞ்சித்குமார்  முக்கிய கதாபாத்திரத்தில் N.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.



 



இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .எம் ஜி ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி .ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.



 



வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு.அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம்.



 



கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,



"கள்ள நோட்டு பற்றி  எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.



 



இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் "என்றார்.



 



படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும் போது,



'நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் .எனக்கு  மறக்க முடியாத ஒரு படம் கள்ள நோட்டு. இதில ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் பாத்திரம் அமைந்துள்ளது.



 



இயக்குநர் தனக்குத் திருப்தியான வகையில் காட்சிகள் வரும் வரை மீண்டும் மீண்டும் எடுத்தார்.ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனம் பேசப்படும். இந்த படத்தில் நான் கருங்காலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது ஒரு கொடூரமான பாத்திரம். நடித்து முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது . படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன் .அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன்.அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளேன். படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.



 



விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா