சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்”
Updated on : 23 April 2022

அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, 'ஓ மை டாக்', படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள்.  இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் அன்பைப் பெற்று வருகிறது, அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.



 



இந்த வியாழனன்று, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்  ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு  ட்வீட் செய்தார், அதில் "ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று எழுதியிருந்தார், அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார், அதில் “மிக்க நன்றி!!  நான் ஜான்டி ரோட்ஸ் உடைய  பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்!!”



 



இந்திய நடிகர் மகேந்திரன், திரைப்படத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த  மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக இணைத்தது குறித்து தனது அன்பை விவரித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது - "#OhMyDog இந்த திரைப்படத்தில் #ஆர்ணவ்விஜய் நடிப்பை பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களை  ஒன்றாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா. இந்த இதயப்பூர்வமான திரைப்படத்தை @PrimeVideoIN இல் பாருங்கள்"



 



அதேசமயம், தயாரிப்பாளர் S.R.பிரபுவும் இந்த கோடையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்  இணைத்து இப்படத்தை பார்த்து ரசிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தன் பக்கத்தில் எழுதியுள்ளதாவது  - "#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதை தவற விடாதீர்கள்!!"



 





 



இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கியும் படத்தைப் பார்ப்பதற்கான தனது எதிர்பார்ப்பை குறித்து எழுதினார் - "இந்த பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது 'ஓ மை டாக்' பார்க்க ஆவலாக உள்ளேன்!"



 



‘ஓ மை டாக்'  படத்தினை ஜோதிகா-சூர்யா தயாரித்துள்ளனர், ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் S. R. ரமேஷ் பாபு RB டாக்கீஸ் சார்பில் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.  நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் இடையேயான 4 பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது. பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில்  கிடைக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா