சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

சாணி காயிதம் - கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பு குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன்
Updated on : 28 April 2022

முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த  அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.



 



பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன். இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத  ஒரு புதுமையான பாத்திரம்.  அவர் கண்டிப்பாக இதற்கு  சரியாகப் பொருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை புதுமையான  தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார். இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.



 



தனது கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஏற்ற நடிகரை முழு நம்பிக்கையோடு தேர்வு செய்த பின் அவரது சகோதரனாக நடிக்கச் சிறந்த நடிகரைத் தேடிய பயணித்ததைப் பற்றி கூறிய இயக்குனர் “செல்வா சார் திரைப்படத் துறையில் பிரபலாமான மற்றும் நன்கு அறியப்பட்ட இயக்குனர், அவர் இக்கதாபாத்திரத்தை ஏற்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.” என்றார்.



 



 சாணி காயிதம் படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவனை அணுகி தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சூழல் குறித்து அருண் கூறுகையில் “சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் செல்வா சாரை அணுகுவது எளிதாக இருந்தது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே விரும்பி ஏற்றார்” என்றார்.



 



ஒரு பிரபல இயக்குனரை இயக்கிய அனுபவத்தைப் பற்றி மேலும் கூறிய அருண், “நான் அவரை ஒரு இயக்குனராகப் பார்த்தேன், அவர் அட்வைஸ் தருவாரா ?  அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் தன்னை  வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை அவர் பொய்யாக்கினார்.” என்றார்.



 



ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள சாணி காயிதம் திரைப்படம் மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா