சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

8 நாட்களில் வெளியாக காத்திருக்கும் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்'
Updated on : 28 April 2022

இன்னும் 8 நாட்களில் வெளியாக காத்திருக்கும்  “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” இந்தியாவில் பிளாக்பஸ்டர் பாக்ஸ்ஆபிஸ் கலெக்‌ஷனை பெறபோகிறது, வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 



 



இப்படத்திற்கு இந்தியாவில் முதல் முறையாக, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு தொடங்கப்பட்டது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது. 



 



உலக திரை வரலாற்றில் ஒவ்வொரு முறை பாக்ஸ்ஆபிஸ் சாதனை முறியடிக்கபடும் போதும், மார்வல் திரையுலகின் திரைப்படம் அதில் இருக்கும், அதுபோல இந்த முறை  டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் ஒரு புது சாதனையை நிகழ்த்தவுள்ளது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அட்வான்ஸ் முன்பதிவு மூலமாகவே 10 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது, இன்னும் படம் வெளியாக 8 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 



 



மார்வல் ஸ்டுடியோஸ் உடைய  “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்”  திரைப்படம் 2022-ல் உலகமெங்கும் அனைத்து திரை ரசிகர்களாலும் எதிர்பார்க்கபடும் திரைப்படமாக உள்ளது. இந்த மிகப்பிரமாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் வெளியீட்டிற்கு 30 நாட்களுக்கு முன்னர், அட்வான்ஸ் முன்பதிவு செய்யும்  விஷயத்தில், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை. 



 



திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக தயாராக உள்ளது. படத்தின் முன்பதிவு எண்ணிக்கை ஒரு பிளாக்பஸ்டருக்கான ஆரம்ப அறிகுறிகளை கொண்டுள்ளது. 



 



கமல்  ஜியான்சந்தனி- CEO - PVR pictures கூறியாதவது...,



 



“மார்வல் திரைப்படங்கள் எப்பொழும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும். ஒரு மாதத்திற்கு முன்னரே அட்வான்ஸ் புக்கிங் செய்யும் முடிவு, ஸ்டூடியோ செய்ய புத்திசாலிதனமான விசயங்களில் ஒன்று. அட்வான்ஸ் புக்கிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, ரசிகர்களிடமிருந்து வரும் வரவேற்பு, இந்தியா முழுவதும் ஷோக்களை சீக்கிரம் ஹவுஸ்புல் ஆக்கிவிடும்”



 



தேவங் சம்பத், CEO Cinepolis கூறியதாவது, 





“மார்வல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது, அத்தோடு இந்த திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவெஞ்சர்: எண்ட் கேம் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் கடைசியாக பெரிய முன்பதிவுகள் இருந்தது, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்போடு, அடுத்த மார்வல் பிளாக்பஸ்டர் வெளியாகவுள்ளது.  Cinépolis இந்தியாவில் 400 திரைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது.”



 



ராஜேந்தர் சிங் ஜியாலா, Chief Programming Officer, INOX Leisure கூறியாதவது..,





“மெட்ரோ நகரங்களில் எப்போதும் மார்வல் படத்திற்கு  பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும், ஆனால் இந்த முறை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்திற்கு குறுநகர மார்கெட்களில் வந்த வரவேற்பு எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்வெல் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய பிம்பத்தை,  இது காட்டுகிறது. ஐநாக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு எண்கள் அபரிமிதமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் படம் பெரிய எண்ணிக்கையுடன் திரையிடப்படவுள்ளது."



 



 “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா