சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

மதுரையில் பா.இரஞ்சித்தின் உறையுடன் துவங்கிய தலித் எழுத்தாளர்களுக்கான, தலித் இலக்கியகூடுகை
Updated on : 29 April 2022

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக  கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.



 



அதன் தொடர்ச்சியாக 

மதுரையில் இன்று தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.  ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் இன்று துவங்கியது துவக்க உறையாற்றிய பா.இரஞ்சித்



 



தலித் எழுத்துக்கள் தான் என் திரைப்பயணத்தின் துவக்கம்.  உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிந்தது. 



 



வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னிப்பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல்.



 





 



90 களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது. 

இப்பொது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத்தொடங்கியுள்ளது. 

அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். முன்பெப்போது  இல்லாத தலித் இலக்கியம் பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன.



 



 'இன வரைவியல்' என்ற வகைமையை உருவாக்கிய பெரும்பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்களை குறித்து மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியை குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம்.



 



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா