சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ஜெய் ஆகாஷ் நடிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் 'அமைச்சர்'
Updated on : 30 April 2022

திரைப்படத்தை ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்களின் உருவாக்குதலில் தயாரித்து உள்ளார்கள்.இந்தப் படத்தில் கேமரா , வசனம், தொழில்நுட்ப உதவிகள் என்று அனைத்திலும் விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இப்படத்தின் தொழிற்நுட்ப கலைஞர்களூடன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.



 



இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக தேவிகா நடிக்கின்றனர் .இத்திரைப்படத்தில் சர்வதேச விளையாட்டு வீரர் சௌந்தரராஜன், காவல் துறையில் உயர்பதவியில் இருந்த S.D. ராஜன், A .P.சேகர் ,உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி, முன்னணி நடிகரான திரு.விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.



 



இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி மற்றும் கபிலன் ஆகியோர் மிகத் தெளிவான பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இப்படத்திற்குதேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை பதிவேற்றம் செய்யப்பட்ட யூ-டியூபில் 23 லட்சம் பேர் கண்டு களித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது . மேலும் தமிழகத் திரை உலகின் முன்னணி நடிகரான திரு.விஜயகுமார் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.மூத்தோர் திட்டம் சமத்துவத் திட்டங்கள் போன்ற நற்பணிகள் செய்யும் கதாபாத்திரமாக அமைச்சர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.



 



இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில்  படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U’சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் இம்மாதம்  ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா