சற்று முன்
சினிமா செய்திகள்
நடிகர் சங்க தேர்தலை போல் கருணாஸ் வெற்றி சரத்குமார் தோல்வி
Updated on : 19 May 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார்.
ஆனால் அதிமுக சார்பாக திருவாடாணை தொகுதியில் போட்டியிட்ட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வெற்றிப்பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலிலும் விஷால் அணியில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றிப்பெற்று துணை தலைவராக உள்ளார். எதிர் அணியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'
யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா;
பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;
தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது. கதாநாயகனாக நடிகர் மதி அறிமுகமாகிறார், அவரது கடினமான உழைப்புக்கும், பொறுமைக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இயற்கை, மனிதன், மற்றும் யானைகளின் உறவுகளை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். படம் முழுக்க பரபரப்பான சம்பவங்களும், இதமான உணர்வுகளும் இணைந்து நகரும் விதத்தில் அமைந்துள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். யானைகளை மையமாகக் கொண்ட காட்சிகள், பரந்த காடு மற்றும் இயற்கை அழகுகளை பதிவு செய்த காட்சியமைப்புகள், “கும்கி 2”-இன் சிறப்பாக இருக்கும்.
பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து வழங்கும் “கும்கி 2”, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கும்கி படத்தின் ரசிகர்கள் முதல் Gen z கிட்ஸ்கள் கொண்டாடும் வகையில் “கும்கி 2” திரைப்படம் உருவாகியுள்ளது.
மதி, ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
"சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.
சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்றுகிறது.
"பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு" என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.
சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமிபிரியா, அபிநயா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் தாங்கி வருகிறது.
'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் திரைப்படம் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!
நடிகர் அதர்வா முரளியின் 'தணல்' படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது 'தணல்' திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை.
படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, "என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்" என்றார்.
இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு 'தணல்' படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.
தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, "இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம் கூறியபோது வில்லனாக நடிக்கப் போகிறோம் என்றே தோன்றவில்லை. கதாநாயகனுக்கு இணையாக ஆண்டி-ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்றுதான் தோன்றியது. கான்ஸ்டபிளாக தனது வேலையை தொடங்கும் ஒருவன் மற்றும் தன் வாழ்வில் ஆறாத வடுவை சுமக்கும் மற்றொருவன் என இரு நபர்களை சுற்றி நடக்கும் கதை இது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்'. தற்போது, படம் பார்த்திருக்கும் பத்திரியாளர்கள் தரப்பில் இருந்து பாரட்டுகள் குவிவது மகிழ்ச்சியாக உள்ளது. படப்பிடிப்பில், என் நடிப்பைப் பாராட்டி ஊக்கப்படுத்திய அதர்வாவுக்கும் நன்றி! அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்" என்றார்.
நடிகர்கள்: அதர்வா முரளி, அஸ்வின் காகுமனு, லாவண்யா திரிபாதி, ஷா ரா, பாரத், லக்ஷ்மி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர பிரதேசம், சித்தூர், வேலூர், பெங்களூர், பாண்டிச்சேரி மகாபலிபுரம், கோவளம், சென்னை ஆகிய இடங்களில் 65 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுமையான காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி வரிகளில், ரசிகர்களை மயக்கும் ஏழு அருமையான பாடல்களும், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார். ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘பாம்’. ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், ‘பாம்’ படம் மூலம் முதல் முறையாக காமெடியில் கலக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், என்று படக்குழு தெரிவித்துள்ளது.
’சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை மற்றும் நடிப்பால் மிரட்டிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பதோடு, தனது நடிப்பு திறமையால் நகைச்சுவைக் காட்சிகளை கூட, வழக்கமான பாணி இல்லாமல், தனது பாணியில் சற்று புதிதாக கையாண்டிருப்பவர், காதல் காட்சிகள் மற்றும் பாடல்களிலும் பட்டையை கிளப்பியிருக்கிறாராம். நிச்சயம் இந்த படம் அர்ஜுன் தாஸுக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
மேலும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில், போகும் நபர்களை துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்...பாம்...பாம்...” என்று கூவி கூவி விளம்பரப்படுத்துவதும், தனது கம்பீரமான காந்த குரல் மூலம் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அவர் முதல் முறையாக கமர்ஷியல் காமெடி படத்தில் நாயகனாக நடித்திருப்பதால் ‘பாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்
30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகிவருகிறது. அதற்காகவே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
படக்குழுவின் தகவலின்படி, “பாகுபலி படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசை போல், இங்கு குடிசைப்பகுதி பேரரசு உருவாக்கப்படுகிறது. கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதை படத்தில் காண்பிக்கின்றனர். அவ்வளவு பெரிய கதைப் பயணத்தை காட்டுவதற்காகவே இந்த மாபெரும் செட் அமைக்கப்படுகிறது. அந்த குடிசைப்பகுதியின் மையத்தில் ஒரு பெரிய வளைவு (Arch) இருக்கும். இதனை நாம் அண்மையில் வெளியான அறிவிப்பு வீடியோ மற்றும் போஸ்டர்களில் பார்த்தோம். அந்த வளைவு கதாநாயகனின் பேரரசின் அடையாளமாக அமையும்.” என்று கூறப்படுகிறது.
இந்த செட் அமைப்பு பாகுபலி படத்தில் காணப்பட்ட மாபெரும் மகிழ்மதி பேரரசின் அளவுக்கு இணையானதாக இருக்கும், ஆனால் இங்கு பிரமாண்ட அரண்மனைகளுக்குப் பதிலாக ஆங்காங்கே ஆர்ப்பரிக்கும் குடிசைப்பகுதிகள் காணப்படும். இதன் மூலம் ‘ஸ்லம்ஸ்களின் பாகுபலி’ செட்டை பார்வையாளர்களுக்காக படக்குழு உருவாக்கி வருகின்றனர்.
தனித்துவமான திறமை கொண்ட ஸ்ரீகாந்த் ஓடேலா, ‘தி பாரடைஸ்’ மூலமாக மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார். முன்னதாக சுகுமார் இயக்கிய ‘நன்னக்கு பிரேமதோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ படங்களில் உதவி இயக்குநராகவும், பின்னர் இயக்குநராக தனது முதல் படமான ‘தசரா’வில் 100 கோடியை கடந்த வசூலுடன் விமர்சகர்களின் பாராட்டையும், நடிகர் நானியின் கரியரில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார். மிகக் குறைந்த காலத்தில் சினிமா உலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் அவர், ‘தி பாரடைஸ்’ மூலம் மேலும் உயரத் தயாராகி வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் இப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முன்னதாக அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி ஆகியோரின் குரலில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SLV சினிமாஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம், ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் 2026 மார்ச் 26 அன்று, உலகமெங்கும் பிரம்மாண்டமாக அளவில் வெளியிடப்படுகிறது. 8 மொழிகளில்—இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கவிருக்கிறது.
அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!
பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !!
தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தற்போது, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, மேலும் ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் “ஆந்திரா கிங் தாலுகா” உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. இந்த வரிசையோடு, தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் தன்னம்பிக்கையுடன் வலம்வருகிறார்.
ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ, மிகச்சிறந்த நடிகையாக வேண்டுமென்கிற தன் கனவை அடைய, விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலுடன் உழைத்து வருகிறார்.
SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது, இந்த பன்முகத் திறமை கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போஸுக்கு ஒரு தொடக்கமே. அவரை பெரும் திரையில் கண்டு ரசிக்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!
சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட் அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங், மற்றும் புரோட்டீன் அடிப்படையிலான டயட்டில் ஈடுபட்டு கடுமையாக உழைத்துள்ளார். இது வரை தனது படங்களுக்காக அவர் செய்த மிகப்பெரிய உடற்பயிற்சி இதுவே ஆகும்.
முந்தைய காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், நானி இதுவரை தோன்றியிராத ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயரான ‘ஜடல்’ அவரின் தனித்துவமான இரட்டை சிகை (twin braids) அலங்காரத்தில் இருந்து உருவானது.
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2026ஆம் ஆண்டு மிகப் பெரிய பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் 8 மொழிகளில் வெளியாகிறது.
பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்" என்றார்.
படத்தின் கதை குறித்து கேட்டபோது, "இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதே சமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது" என்றார்.
படப்பிடிப்பு செப்டம்பர் 10 ஆம் தேதியில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. ஒரே ஷெட்யூலாக முடிய இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை கொடுக்கும்.
மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரதன் இசையமைத்திருந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா