சற்று முன்

'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |   

சினிமா செய்திகள்

ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'
Updated on : 02 January 2026

'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'.



 



தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான  'சுப்ரமணி' திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக தளபதி விஜய் நடித்த 'யூத்' மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஜித்தன்' திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 



 



ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா, "இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டியும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஐந்து கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம். வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார். 



 



ஆர் கே செல்வா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தில் பிரணவ் மற்றும் பாலாஜி ப்ராஜெக்ட் ஹெட் ஆகவும் இணை தயாரிப்பாளர்கள் ஆகவும் பணியாற்றியுள்ளனர். அப்சல் பெய்க் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தயாரிப்பு நிர்வாகி: எம். ஜெ. பாரதி



 



தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா 'சுப்ரமணி' படத்தின் நாயகியாக நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் ஜாஸ்பர், லொள்ளுசபா சுவாமிநாதன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் 'சுப்ரமணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' புகழ் சனுக்யா இசையமைக்க அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை டான் மேக்ஸின் உதவியாளரான சுஜிர் பாபு கையாள சண்டை பயிற்சிக்கு ராம்போ விமல் பொறுப்பேற்றுள்ளார். எஃபக்ட்ஸ்: சேது, விஎஃப்எக்ஸ்: சுனில் (69 ஷேட்ஸ்), டிசைன்ஸ்: குமரன் கே, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்



 



எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா