சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

சமந்தா நடிப்பில் அசரவைக்கும் காட்சித்துணுக்குகளுடன் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள யசோதா
Updated on : 05 May 2022

யசோதா கண் விழிக்கிறாள்,  இதுவரையிலான அவளது உலகம்  இனி இல்லை. அவளது சூழல், அவளது உடை, அவளது காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சர்யாமாக முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அவளது இதயதுடிப்பின் சத்தம் அவள் காதை கிழிக்கும் நேரத்தில் அவள் ஜன்னல் கதவை திறக்கிறாள் அங்கு ஒரு புறா அவள் வேண்டும் சுதந்திரத்தை சுவாசிக்கிறது. அவள் அதை பிடிக்க நினைக்கிறாள் என்ன நடந்தது ? 



 



மேல் கண்ட அனைத்தும் 'யசோதா' முதல் பார்வையில் இடம்பெற்றுள்ளவை. இந்த காட்சித்துணுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், படத்தில் இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார்.



 



Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சமந்தா நாயகியாக நடிக்கும் 'யசோதா' படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது. திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 



 



படத்தின் முதல் பார்வை இன்று வெளியான நிலையில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், "சமந்தா 'பேமிலி மேன் 2' வெப்சீரிஸ் மூலம் பான்-இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரது வளர்ச்சியை மனதில் வைத்து, இந்த படத்தை சமரசமின்றி உருவாக்குகியுள்ளோம். சமந்தா தனது பாத்திரத்தை வெளிப்படுத்திய விதம், அவரது அர்பணிப்பு மிகவும் பாராட்டபடவேண்டியது .அவரது நடிப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஏப்ரலில் சண்டை பயிற்சியாளர் வெங்கட் மேற்பார்வையில் கிளைமாக்ஸ் பகுதியை கொடைக்கானலில் படமாக்கினோம். ஏற்கனவே 80% படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜூன் 1வது வாரம் வரை படப்பிடிப்பு நடைபெறும். ஸ்பெஷல் எஃபெக்ட்களும் இந்தப் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எங்களின் இயக்குநர் ஹரி-ஹரிஷின் பணி பிரமிக்க வைக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.



 



இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா