சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கும் 'வேழம்'
Updated on : 08 May 2022

SP Cinemas தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் இத்தயாரிப்பு நிறுவனம், அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான 'வேழம்' திரைப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. K4 Kreations கேசவன் தயாரித்துள்ள இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குனராகவும், பல்வேறு விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கிய அனுபவமுள்ளவர். இப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘தெகிடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வனும், ஜனனியும் மீண்டும் திரையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தயாரிப்பாளர் கேசவன், தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து, திரைப்படம் மற்றும் ஊடகத் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருப்பதால், தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களை உருவாக்குவதில் அவர் எப்போதும் முனைப்புடன் இருப்பார் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக அவரது அவதாரம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் சினிமாவில் நுழைவதற்கான நம்பிக்கையை வழங்குகிறது. K4 Kreations பேனரின் கீழ் அவரது முதல் தயாரிப்பாக “வேழம்” வெளிவரவுள்ளது.



 



தயாரிப்பாளர் கேசவன், K4 கிரியேஷன்ஸ் இது குறித்து கூறியதாவது...





“நாங்கள் ஏற்கனவே பல்வேறு வணிகத் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியடைந்து வருகிறோம், இப்போது ஊடகத் துறையில் எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். கலைப் படைப்புகள் மீது  கொண்ட மிகுந்த ஆர்வத்துடன், K4 K4 Kreations  உள்ள நாங்கள், எங்களின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை தயாரிக்க ஆவலோடு  இருக்கிறோம். எங்களின் முதல் தயாரிப்பு முயற்சியான ‘வேழம்’ அதிக நம்பிக்கையையும் நேர்மறை அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கி எங்கள் கனவை நனவாக்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன்,  மேலும் மற்ற  அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அளித்த தீவிர ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குனர் சந்தீப் ஷியாமுடன் பணிபுரிந்ததில் பெரும் மகிழ்ச்சி. தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான SP Cinemas  எங்கள் திரைப்படத்தின் மேல் ஆர்வத்தை வெளிப்படுத்தியது எங்களது பாக்கியம். அவர்களின் மூலம் வேழம் படத்திற்கு சிறந்த  தியேட்டர் வெளியீடு கிடைக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். “



 



மேலும், படத்தின் தலைப்பான  “வேழம்”  மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய  தயாரிப்பாளர், “வேழம் என்றால் யானை, கதாநாயகன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆக்கிரமிப்பு, பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல் போன்ற உயிரினங்களின் குணாதியங்களை கொண்டுள்ளார்கள். முழு திரைப்படமும் இந்த குணாதியங்களை சுற்றியே சுழல்கிறது என்றார். 



 



‘வேழம்’ படத்திற்காக K4 Kreations உடன் இணைந்திருப்பதில்  SP Cinemas மகிழ்ச்சி அடைகிறது. தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட படத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்ளும் அவர்கள், இந்த படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறார்கள். அசோக் செல்வன் சரியான கதைகளை  தேர்ந்தெடுப்பது, அனைவரையும் ஈர்க்கும் வகையிலான நடிப்பை வழங்குவது என  மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும், தமிழ் திரையுலகில் K4 Kreations  போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் வருகையை கண்டு மகிழ்கிறது SP Cinemas. நல்ல திரைக்கதை மூலம் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் திரைப்பட இயக்குனர்களுக்கு, கேசவன் போன்ற தயாரிப்பாளர்களின் வருகை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று SP Cinemas நம்புகிறது.



 





 



இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், பி எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை- ஜானு சந்தர், ஒளிப்பதிவு- சக்தி அரவிந்த், படதொகுப்பு-  A.K  பிரசாத், கலை இயக்கம்- சுகுமார். R, சண்டை- தினேஷ் சுப்ராயன், சவுண்ட் மிக்ஸிங்- M சரவணகுமார், PRO- சுரேஷ் சந்திரா & ரேகா ( D’One) ஆகியோர் படத்தின் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர். 



 



இந்தியா உட்பட இப்படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையை SP சினிமாஸ் வாங்கியுள்ளது.  டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா