சற்று முன்

வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |    கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம் - எழுத்தாளர் கமலா   |    நடிகர் ஆர்யா அண்ணாநகரில் திறந்து வைத்த பிரியாணி கடை!   |    'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |   

சினிமா செய்திகள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை இதுதானாம்!
Updated on : 19 May 2016

எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்".



 



இது இயக்குனர் எழில், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் c.சத்யா ஆகிய மூவருக்கும் 10-வது திரைப்படம் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி.



 



இந்நிலையில், இந்த படத்தின் கதைக்கரு குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. "கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனின் விசுவாசி , நம்பிக்கை மற்றும் அவருக்கு சகலமுமாக இருக்கிறார் டெய்லாரான முருகன். இதே நிலையில் மந்திரி பதவிக்காக ஆசைப்படும் அதே கட்சியின் வேறொரு தொகுதி எம்.எல்.ஏ-வான மருதமுத்து , ஜாக்கெட் ஜானகிராமனை தனக்கு போட்டியாகவும் அதற்காக சந்தர்ப்பம் பார்த்து அவரைத் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.



 



இது ஒரு புறம் இருக்க ஊர்விட்டு ஊர் வந்து ஹோட்டல் கடை நடத்தும் ராஜாமணி , எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கை கேள்விப்பட்டு தன் மகள் அர்ச்சானாவின் போலிஸ் வேலைக்காக லஞ்சமாக ரூபாய் இருபத்தைந்து லட்சம் பணத்தை முருகனிடம் தருகிறார்.



 



பணத்தை வாங்கும் முருகன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தன் மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று நினைக்கும் முருகன், அந்த பணத்தை உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் மந்திரியை பார்பதற்காக சென்னைக்கு கிளம்பி கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் கொடுக்க விவரம் சொல்லி கொடுக்க , அவரும் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன் என்று சென்னைக்கு செல்கிறார்.



 



சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது ? மந்திரியையும் , டி.ஜி.பியையும் ஜாகெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா ?? அர்ச்சானவிருக்கு வேலை கிடைத்ததா... இல்லையா ?? முருகனின் காதல் என்னவாயிற்று என்பது நகைச்சுவை கலந்த மீதிக்கதை" என்று படக்குழு தெரிவித்துள்ளது.



 



மேலும், சத்யா இசையமைப்பில் உருவாகியுள்ள குத்தீட்டி என்ற படத்தின் ப்ரமோ பாடலையும் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா