சற்று முன்

ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |   

சினிமா செய்திகள்

மாஸ்டர் பட தயாரிப்பாளருக்காக விஜய் சேதுபதி செய்த உதவி
Updated on : 20 May 2022

மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்களின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனரும்  அவருடைய உடன் பிறந்த தம்பியுமான R.விஜயகுமார் இயக்குகிறார்.



 



இந்த படத்தில் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள்செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். 



 



இந்த படத்தில்  N.R.ரகுநந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்று பாடல்களும், யுகபாரதியின் ஒரு பாடலும், ஏகாதேசியின் ஒரு பாடலுமாக மொத்தம் ஐந்து முத்தான பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன.



 



மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா.



 



இந்த படத்தின் பாடலான "ஒரு சின்ன பறவை...." என்ற பாடல் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி பிரியங்காவின் இனிமையான குரலில் வைரலாகியுள்ளது.



 



"அழகிய கண்ணே" ஒரு மண் சார்ந்த கதை என்றாலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். இதன் படப்பிடிப்பு மதுரை உத்துப்பாட்டி மற்றும் திண்டுக்கல்லை சுற்றி இதுவரை யாரும் படமாக்கப்படாத இடங்களில் 45 நாட்கள் படமாக்கப்பட்டு இரண்டு மணி நேர படமாக ரிலீசுக்கு தயாராக உள்ளது.  



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா