சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

அம்மா வெற்றிக்கு நமீதா சொல்லும் காரணம்
Updated on : 20 May 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று, முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும் ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:



"நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.



 



இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.



 



ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.



 



மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.



 



அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும்  வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள்.



 



இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.



 



மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.



 



இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில்  அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்"  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா