சற்று முன்
சினிமா செய்திகள்
புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கே.ராஜன் சந்தித்தார்
Updated on : 20 May 2022

புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்படப் பாதுகாப்புக்கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன் மற்றும் கர்ஜனை, கன்னித்தீவு படங்களின் இயக்குனர் ப.சுந்தர் பாலு ஆகியோர் சந்தித்தனர்.
புதுவையில் திரைப்பட நகர் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கே.ராஜன் வேண்டுகோள் வைத்தார்.
சமீபத்திய செய்திகள்
IMDB கொடுத்த ரேட்டிங்.... 'மாமனிதன்' படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.
படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். குடும்பம் சகிதமாக முக்கியமாக பெண்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.
சிறந்த படங்களுக்கு மதிப்பீடு கொடுக்கும் IMDB நிறுவனம் மாமனிதன் படத்திற்கு 8.1 /10 கொடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வெளியான திரைப்படங்களில் மாமனிதன் படத்திற்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக மாமனிதன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ்
தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார்.
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாயோன்'. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி, படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறது. இந்த தருணத்தில் தமிழ் திரை உலகில் கடவுள் மறுப்பு கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையவரும், பெரியாரிய சிந்தனையாளருமான புரட்சி நடிகர் சத்யராஜ், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகமும், அறிவியலும் கலந்த 'மாயோன்' திரைப்படத்தை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் கண்டுகளித்தார்.
படம் நிறைவடைந்ததும் 'மாயோன்' குறித்து சத்யராஜ் பேசுகையில், '' மாயோன் திரைப்படம் எங்களுக்கு பிடித்ததைப் போல் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. படம் முடிவடைந்ததும் இருக்கைகளில் எழுந்துநின்று கைதட்டினார்கள். இந்த கைதட்டல்கள் தான் படத்தின் உண்மையான வெற்றிக்கு கிடைத்த சாட்சி. இந்தப்படத்தில் சிபி சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களால் தான் என்னுடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்திலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை இசைஞானி அளித்திருக்கிறார். இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் தெளிவாக திட்டமிட்டு படத்தை இயக்கி இருக்கிறார்கள். அனைத்து வகையிலும் சிறப்பாக அமைந்திருக்கும் இந்த படம் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்கள் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.'' என்றார்.
இதனிடையே தமிழகத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற 'மாயோன்' திரைப்படம் ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கு மொழியில், 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதுதொடர்பாக ஹைதராபாத்தில் ஜூலை 1ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் 'பாகுபலி' படத்தில் கட்டப்பாவாக நடித்து தெலுங்கு மக்களின் அபிரிமிதமான அன்பை பெற்றிருக்கும் புரட்சி நடிகர் சத்யராஜ் கலந்துகொள்கிறார். இவருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்திய நடிகையாக மாறிய கோமல் சர்மா
அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள். இதற்கான பலன் இங்கே தமிழ் சினிமாவில் கிடைக்காவிட்டாலும் மற்ற மொழிகளில் உள்ள படைப்பாளிகளின் கண்களில் இவர்களது திறமை பளிச்சிட்டு மிகப்பெரிய வாய்ப்புகள் தேடி வந்து பெரிய நட்சத்திரங்களாக மாறியவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட அந்த சிலரில் ஒருவர் தான் நடிகை கோமல் சர்மா .
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் இருந்து மிகப்பெரிய படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் இவரை தேடிவந்து அங்கே அழைத்துச் சென்றன.
அந்தவகையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பிரம்மாண்டமாக வெளியான வரலாற்று படமான மரைக்கார் படத்தில் அர்ஜூனின் மனைவியாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோமல் சர்மா. அந்த படத்திற்காக மலையாள மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார்.
படப்பிடிப்பில் இவரது அர்ப்பணிப்பு உணர்வையும் நடிப்புத்திறமையும் பார்த்த மோகன்லால் இவரிடம், “நீ இன்டர்நேஷனல் லெவலில் பெரிய நடிகையாக வருவாய்” என்று பாராட்டியுள்ளார். அப்போதைக்கு அவர் ஏதோ பாராட்டுக்காக சொல்கிறார் என நினைத்த கோமல் சர்மாவுக்கு அதன்பின் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது இயக்கிவரும் பரோஸ் என்கிற படத்தில் கோமல் சர்மாவை அழைத்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தபோது தான் அப்போது மோகன்லால் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததாம்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வரலாற்றுப்படமாக உருவாகி வரும் இந்த பரோஸ் படத்தில் நடிக்கும் ஒரே ஒரு இந்திய நடிகை, அதுவும் தமிழ் நடிகை கோமல் சர்மா மட்டுமே. கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துல்ல, நடிப்பின் கடவுள் என புகழப்படுகின்ற மோகன்லால், தான் முதன்முதலாக இயக்கும் ஒரு படத்திற்கு, தான் மனதில் நினைத்து வைத்த ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னை தேர்ந்தெடுத்ததையே தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு விருதாக நினைப்பதாக பெருமையுடன் கூறுகிறார் கோமல் சர்மா.
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்கார் படத்தில் நடித்தபோதே இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குனர் பிரியதர்ஷன் இந்தியில் தான் இயக்கி வந்த ஹங்கமா-2 என்கிற படத்திலும் சிம்ரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.
இப்படி மலையாளத்தில் கோமல் சர்மாவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வந்த நிலையில் தமிழிலும் சமுத்திரகனி நடித்துள்ள பப்ளிக் என்கிற படத்திலும், அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மோகன்லாலை வைத்து பெருச்சாளி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கிவரும் சாட் பூட் த்ரீ படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்து, அந்த படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் கோமல் சர்மா.
இதில் சாட் பூட் த்ரீ குழந்தைகளை மையப்படுத்திய படமாக உருவாகி உள்ளது. இதில் குழந்தைகளுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்கிறார் கோமல் சர்மா. அதேபோல அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள பப்ளிக் படத்தில் சினிமா நட்சத்திரமாக நடித்துள்ளார் கோமல் சர்மா. அந்தவகையில் இந்த வருடம் கோமல் சர்மா நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் பான் இந்தியா நடிகையாகவே மாறிவிட்ட கோமல் சர்மாவை தற்போது இந்தியிலும் தமிழிலும் சில முக்கியமான படவாய்ப்புகள் தேடி வந்துள்ளன.
இந்தியில் ஹங்கமா-2 படத்தில் நடித்து வந்த சமயத்தில்தான் மாநாடு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்ததால் கோமல் சர்மாவால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதை ஏற்க முடியாமல் போய்விட்டது.. அதுகுறித்து ரொம்பவே வருத்தப்படுகிறார் கோமல் சர்மா. அதேபோல பரோஸ் படப்பிடிப்பில் நடித்து வந்த சமயத்தில்தான் தமிழில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த மிகப்பெரிய படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நழுவிப் போனது என்றும் கூறுகிறார் கோமல் சர்மா.
சக நடிகராக மோகன்லாலுடன் இணைந்து நடித்த கோமல் சர்மா ஒரு இயக்குனராக மோகன்லாலை எப்படி பார்த்தார்..?
“மோகன்லால் தான் நடிக்கும் படங்களில் இயக்குனரின் வேளைகளில் எந்த ஒரு குறுக்கிடும் செய்யமாட்டார். அதேபோல தற்போது அவர் இயக்கி வரும் பரோஸ் படத்தில் நடித்தபோது பெரிய நட்சத்திரங்களிடமும் சரி, குழந்தை நட்சத்திரங்களிடமும் சரி, காட்சியை பற்றி மிகவும் பொறுமையாக விளக்குவார்.. அவர் நினைத்திருந்தால் ஒரு கமர்சியல் ஆக்ஷன் படம் எடுத்திருக்க முடியும். ஆனால் தான் முதன்முறையாக இயக்கும் படம் குழந்தைகளை கவரும் விதமாக, குடும்பம் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து இயக்கி வருகிறார்.
பான் இந்தியா படம் என்று சொல்வதைவிட பான் வேர்ல்ட் படம் என சொல்லும் விதமாக பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த பரோஸ். இந்தப்படம் வெளியான பிறகு எனக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் கோமல் சர்மா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்'
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் ஜூலை 8, 2022 முதல் உலகம் முழுவதும்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான "விக்ரம்" படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது.
திரைத்துறையின் உச்சபட்ச ஆக்ஷன் த்ரில்லர்", "ஆண்டவரின் வெற்றி மேஜிக்", "தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி", "ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!! கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான 'விக்ரம்' படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ள, இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என 'விக்ரம்' படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.
விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓபனிங்கை பெற்றது. வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. ‘விக்ரம்’ இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் உலகளாவிய ஓடிடி பிரீமியர் மூலம் ஒவ்வொரு வீடும் இத்திரைப்படத்தின் திருவிழாவாக மாறும் நேரம் இது. கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது. தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.
விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் 'விக்ரம்' என்ற பிரம்மாண்டமான ஆக்ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது.
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜூலை 8, 2022 முதல் கண்டுகளிக்கலாம்.
'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
புஷ்கர் மற்றும் காயத்ரியின் இலட்சிய படைப்பாக உருவானது தான் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர். இந்த தொடர் கண்ணைக் கவரும் காட்சிகளுக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், வித்தியாசமான கதைகளத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. இந்த தொடரைப் பற்றி இணையவாசிகள் மட்டுமல்லாமல் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களும் 'சுழல் தி வோர்டெக்ஸ் ' அமேசான் பிரைம் வீடியோவில் இடம்பெற்ற கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று' என தெரிவித்திருக்கிறார்கள். இந்த பிரபலங்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன், எஸ். எஸ். ராஜமௌலி, விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இந்தத் தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர்- காயத்ரி பேசுகையில், '' எங்களது 'சுழல் தி வோர்டெக்ஸ்' தொடருக்கு இந்திய திரையுல பிரபலங்களிடமிருந்து கிடைத்த பாராட்டு ஆதரவு, அன்பு ஆகிய அனைத்திற்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம். திரையுலகில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சக நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என பலரும் இந்த தொடரை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி ரசிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தொடர் எட்டு அத்தியாயங்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலானது. ஆனால் அனைவரும் இதற்காக தங்களது நேரத்தை செலவிட்டு பார்த்து ரசித்ததுடன், அது தொடர்பான நேர்மறையான செய்திகளை சமூக வலை தளத்தில் பதிவிட்டு எங்களை உற்சாகப்படுத்தினர். இது நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு விசயம். ஒரு வாரம் கழித்து நடைபெறும் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த தொடர் வெளியான குறுகிய காலகட்டத்திற்குள் இந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எங்கள் திரை துறையிலிருந்து சக படைப்பாளிகள் மற்றும் நட்சத்திரங்கள் அளித்த வரவேற்பிற்காகவும், ஆதரவிற்காகவும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். '' என்றனர்.
ஜூன் 17ஆம் தேதி முதல் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.
இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ..நிச்சயமாக அவன் மகத்தானவனே
தமிழில் இறைவனைப் பாடும் தேவாரப்பாடல்கள் தொடங்கி, திரையில் நடிகர்கள் பாடும் பாடல்கள் வரை எத்தனையோ வந்திருக்கின்றன. ஒருகாலத்தில் ஒரு திரைப்படத்தில் 20 க்கும் மேற்பட்ட பாடல்கள் எல்லாம் கூட இடம்பெற்றன. தற்போது ஒன்றிரண்டு பாடல்கள் வரை சுருங்கிவிட்டது. திரைப்படத்தில் பாடல்கள் சுருங்கி விட்டாலும் தனியிசை ஆல்பங்கள் தற்போது கணிசமாக வரத்துவங்கிவிட்டன. அதில் நல்ல பாடல்கள் மட்டும் சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றன. அப்படியொரு வரவேற்பை பெறவே தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது
நகராதே என்ற வரியில் துவங்கும் இப்பாடலை அஷ்வின் ராஜ் தன் நல்ல இசையால் உருவாக்க, கு.கார்த்திக் எழுதியுள்ளார். தங்கள் வசீகர குராலால் நிவாஸ் கே ப்ரசன்னாவும் ஸ்வாகதா எஸ் கிருஷ்ணனும் பாடியுள்ளனர். இசையும் வரிகளும் குரலும் மட்டுமா தனியிசைப்பாடல்? அந்தப்பாடலை கண்கொண்டு கண்டு இன்புற வேண்டாமா? So இப்பாடலை மிக அழகான விஷுவலில் இயக்கியிருக்கிறார் நாஷ். இந்தப்பாடல் காட்சியில் நாயகனாக VJ மாதேவன், நாயகியாக பாடலைப்பாடியுள்ள ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஷாரஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த நகராதே பாடல் 2K கிட்ஸ் மட்டுமின்றி எல்லோர் மனதை விட்டும் நகராது என்கிற அளவில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது
மேலும் இப்பாடல் வெறும் காட்சிப்பாடலாக மட்டுமில்லாமல் கதைப்பாடலாகவும் இருக்கிறது. இந்தப்பாடலுக்குள் கவிதை போன்ற அழகான கதையொன்றுள்ளது. 24-ஆம் தேதி வெளியான இப்பாடல் இணையமெங்கும் பாசிட்டிவ் எனர்ஜியோடு வலம் வருகிறது.
சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்
இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.
இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தலைவராக கே.ராஜன், செயலாளராக காளையப்பன், பொருளாளராக முரளி, துணைத்தலைவராக நந்தகோபால், இணைச்செயலாளராக சாய் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக மெட்ரோ ஜெயகுமார், கிருஷ்ணன், சந்திரன், பிரபுராம்பிரசாத், தியாகு, பன்னீர்செல்வம், மனோகர், சொக்கலிங்கம், ஆனந்தன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, சாகா ரகீம், குரோம்பேட்டை பாபு, ஏ.ஜி.ரகுபதி, கருணாகரன், செல்வம் ஆகியோருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் ஆர்.கே. சுரேஷ், டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி சேகரன், சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.டி.குஞ்சுமோன், பர்பெக்ட் பிக்சர்ஸ் தருண், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான வினியோகஸ்தர்கள் மற்றும் மீடியேட்டர்ஸ் அசோசியேசனின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசி, பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
ஜூலை மாதம் முதல் நலிவடைந்த வினியோகஸ்தர்கள் 100 பேருக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 அன்புத்தொகையாக வழங்க இருக்கிறோம். அதற்கு அச்சாரமாக இன்று 5 பேருக்கு வழங்குவதாக அறிவித்து தலைவர் கே.ராஜன் வழங்கினார்.
மேலும் மாதம்தோறும் இதற்கு ஒரு லட்சம் தேவைபடுகிறது உதவி செய்யுங்கள் என்று தலைவர் கே.ராஜன் கேட்டுக்கொண்டார்.
உடனே எழுந்த ஐசரி கணேஷ் 5 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் ஆர்.கே.சுரேஷ், வினியோகஸ்தர் சங்க துணைத்தலைவர் நந்தகோபால், பொருளாளர் முரளி, இணைச்செயலாளர் சாய் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர்.
செயலாளர் காளையப்பன் வரவேற்புரையும் , பொருளாளர் நன்றி உரையும் ஆற்ற விஜயமுரளி தொகுத்து வழங்கினார்.
'சுழல்' வெற்றிக்காக கதிரை வாழ்த்திய 'இயல்வது கரவேல்' படக்குழு
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இருவரும் இணைந்து தயாரித்துவரும் படம் ‘இயல்வது கரவேல்’. கதிர் மற்றும் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ள யுவலட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் அறிமுக இயக்குனராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குனர் ஹென்றி.
சென்னை கல்லூரியை பின்னணியாக கொண்டு காதல் மற்றும் மாணவர்களின் அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் வில்லனாக நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதிரும் மகேந்திரனும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள். அப்படிப்பட்ட இருவரும் எதிரிகளாக நடிப்பது பார்வையாளர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் அமேசான் பிரைம் ஒரிஜினலில் சுழல் ; தி வோர்டேக்ஸ் வெப்தொடர் வெளியானது. கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த வெப் தொடர் பாசிட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இதையடுத்து இயல்வது கரவேல் படக்குழுவினர் நடிகர் கதிரை நேரில் சந்தித்து இந்த வெப் தொடரின் வெற்றிக்காக அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது
இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில், வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும் ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் உருவாகும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது, இதனையொட்டி தயாரிப்பாளர்கள் நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்த, பெரும் உற்சாகமான இரண்டு அறிவிப்புகளை தந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
அழகு இளம் தேவதை, நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிப்பின் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால், தென்னிந்திய திரைத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை வரவேற்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் உற்சாகத்தில் உள்ளது.
வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா கூட்டணியில் ஒரு திரைப்படம் முன்னதாகவே நடக்க இருந்தது. ஆனால் இருவரும் அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற ஒரு சரியான திரைப்படத்திற்காக காத்திருந்தனர், தற்போது இந்த கூட்டணி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் பிரமாண்டமாக இணைந்துள்ளது. இப்படம் வெங்கட் பிரபுவின் டிரேட்மார்க் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த அட்டகாசமான கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். தவிர, நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள அனைவரையும் கவரும் ஒரு அழகான பாத்திரத்தில் தோன்றவுள்ளார். இந்த திரைப்படத்தில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தை பற்றி வரவிருக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகள் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கும்.
Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட் தூரி, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்படி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது, அவர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தைத் தயாரித்து வருகிறார்,
பவன் குமார் வழங்கும் இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார், இப்படம் ஜூலை 14, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ராம் பொதினேனி மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குனர் போயபதி ஸ்ரீனு (அகண்டா புகழ்) கூட்டணியில் மற்றுமொரு அட்டகாசமான திரைப்படத்தை இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ளது குறிப்பிடதக்கது.
இத்திரைப்படம் இயக்குநராக வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகும், டோலிவுட்டில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம். தெலுங்கு திரையுலகின் யூத் ஐகான் நாக சைதன்யா இந்த திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடதக்கது.
- உலக செய்திகள்
- |
- சினிமா