சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்
Updated on : 23 June 2022

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் ; சாப்டர்-2’.



 



ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.



 



க்ரைம் த்ரில்லர் சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 



 



சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. புன்னகை இளவரசி நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 



 



இந்த படத்தை இயக்கியுள்ள ரங்கா புவனேஷ்வர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர். 



 



அதன்பிறகு மலையாள திரையுலகிற்கு சென்று அங்கே இரண்டு படங்களை இயக்கியவர், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக இருக்கிறது.



 



இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ரங்கா புவனேஷ்வர் அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் ஓநாய் மனிதன் என்கிற வித்தியாசமான கதைக்களத்தில் இந்த "கெஸ்ட்" படத்தை இயக்கியுள்ளார்.



 



இந்தப்படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் கவனிக்கிறார்.



 



இந்த படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, “இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. 



 



நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் இருக்கின்றன.. அதுமட்டுமல்ல இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது. 



 



இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள்.



 



ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. 



 



அதிலும் இங்கே இந்தியாவில் இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்.



 



கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காடு ஆகியவற்றில் கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். 



 



இப்படத்தின் கதாநாயகி சாக்ஷி அகர்வால் அத்தனை நாட்கள் அந்த காட்டுப்பகுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கலந்துகொண்டு நடித்தது பாராட்டுக்குரியது.



 



அதுமட்டுமல்ல இதுவரை நகைச்சுவை நடிகையாக பார்த்து வந்த மதுமிதா இந்த படத்தில் தனது வேறொரு நடிப்பு முகத்தைக் காட்டியுள்ளார். 



 



படத்தின் இரண்டு நாயகர்களும் கூட மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ரன்வீர் குமார் மும்பையை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் எங்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது.



 



படத்தின் கதையே இந்த நால்வரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது.. 



 



இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார்.. அது யார் ? எதற்காக ஓநாய் மனிதராக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை 



 



மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் குட்ஹோப் பிக்சர்ஸ் சார்பாக D கோகுல கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். படத்திற்கான எல்லா தேவைகளையும் தயாரிப்பாளர் வசதியாக செய்துகொடுத்தது படம் மிகச் சிறப்பாக வர உதவியது. 



 



வனப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திகில் அனுபவம் கிடைத்தது. 



 



திருவனந்தபுரம் காட்டுப்பகுதிகளில் எப்போதுமே காலை பத்து மணிக்கு வெயில் வரும் வரை காட்டெருமைகள் சுற்றிக்கொண்டே இருக்கும். அவைகள் அங்கிருந்து சென்ற பின்னரே எங்களால் படப்பிடிப்பை நடத்த முடிந்தது. 



 



அதுமட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக டம்மியாக ஓநாய் உருவத்தில் பொம்மைகள் செய்து வைத்திருந்தோம். அப்படி ஒரு பொம்மையை வைத்து விட்டு மறைவாக நின்று படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எங்கிருந்தோ திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அங்கே படையெடுத்து வந்து அந்த ஓநாய் பொம்மையை இழுத்துச்சென்று கடித்து குதறி சின்னாபின்னப் படுத்தி விட்டன. 



 



அதற்கு முன்னதாக அவைகள் ஓநாய் என்கிற மிருகத்தை அந்த காட்டிலே பார்த்தது இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.



 



அதனால் அடுத்த நாளிலிருந்து விகாரமான பயமுறுத்தும் தோற்றம் கொண்ட சோளக்கொல்லை பொம்மை கொன்றை மரத்தில் கட்டி வைத்து விட்டு அதன்பின் ஓநாய் பொம்மையை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது குரங்குகளின் தொல்லை ஏற்படவில்லை. எங்களது இந்த டெக்னிக்கை பார்த்து வன அதிகாரிகளே வியந்துபோய் பாராட்டினார்கள்” என்று கூறியுள்ளார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா