சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தெலுங்கிலும் வெற்றி; மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி
Updated on : 23 May 2016

முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி நான் படத்திற்கு பிறகு தமிழில் முக்கியமான ஹீரோவாக மாறியது பெரிய விடயம் தான்.



 



ஆனால் "பிச்சைக்காரன்" படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியை வெறும் ஹீரோவாக மட்டும் பார்க்காமல் சிறந்த நடிகராகத்தான் பார்க்க வேண்டும்.



 



சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் அவர். தமிழ் மட்டுமின்றி "பிச்சகாடு" என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கிலும் இந்த படம் வெளியானது.



 



யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தெலுங்கிலும் பிச்சைக்காரன் ஹிட் அடிக்க, படு மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.



 



"இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும், தெலுங்கில் இந்தப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும் உரியது. அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு கதை கரு, தெளிவான திரைக் கதை அமைப்பு, நேர்த்தியான இயக்கம் என சசி சார் வழங்க, நான் என்ன சளைத்தவனா என்று மிக பிரம்மாண்டமாக  விளம்பரப் படுத்தி, அதிக அளவில் திரை அரங்குகள் எடுத்து 'பிச்சகாடு ' படத்தின் வெற்றியை ஊர்ஜிதம் செய்த  லக்ஷ்மன் சாருக்கும் உரியது இந்த வெற்றி.



 



தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு  மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது" என்று பிச்சைக்காரன் வெற்றியை பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா