சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரெய்லர் வெளியானது
Updated on : 30 July 2022

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 



 



மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.



 



கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையைத் நடத்துகிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.



 



‘கடாவர்’ படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய காலக்கட்டத்திலேயே லட்சக்கணக்கானப் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அமலா பால், தயாரித்து, கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கடாவர்’, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.



 



டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி +ஹாட்ஸ்டார் இயங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இதனுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா