சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

சிவ பக்தர்களை பரவசப்படுத்திய இயக்குனர் செல்வராகவன் !
Updated on : 22 September 2022

இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கும்  ’பகாசூரன்’. பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்கம் படம்.



 



இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி ஹியூயோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



 



இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தில் இடம் பெறும் ‘சிவ சிவாயம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இசை மேதை பாபநாசம் சிவன் எழுதிய ‘சிவ சிவாயம்’ என்ற அந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் செல்வராகவன் நடித்திருக்கும் "சிவ சிவாயம்.." பாடல் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சிவ பக்தர்களையும் பரவசப்படுத்தி வருகிறது. 



 



கேட்டவர்களை திரும்ப திரும்ப கேட்கவைப்பது போல பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைக்கும் அந்தப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட்டடித்துள்ளது.



 



குறிப்பாக சிவனடியார் போன்ற தோற்றத்தில் ”என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா…” என்று சிவலிங்கம் முன்பு கைகளை விரித்தபடி செல்வராகவன் அந்த பாடலை பாடும்போது மேனி சிலிர்த்து உருகமுடிகிறது.



 



இப்படத்தின் பாடல்களை எம்.ஆர்.டி. மியூசிக் வெளியிடுகிறது.

படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா