சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனராக அறிமுகம் !
Updated on : 18 January 2023

அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திற்கு "ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டு இன்று பூஜை போடப்பட்டது.



 



இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



 



பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சதிஷ் கதாநாயகனாகவும், சிம்ரன் குப்தா கதாநாயகியாகவும்  நடிக்கின்றார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். 



 



இசை VBR, ஒளிப்பதிவு யுவா, இணை தயாரிப்பு முரளி கிருஷ்ணன்,

படத்தொகுப்பு சித்தார்த், கலை இயக்குனர் G.துரைராஜ்,

காஸ்டியூம் டிசைனர் கிருத்திகா சேகர்.  



 



விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா