சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

ஒரு கிடாயின் கருணை மனு: வதந்தியை நம்பாதீர்கள் என்கிறார் இயக்குநர்
Updated on : 09 June 2016

"ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாகவும், சினிமா என்ற பெயரில் அதை சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்ட நிலையில் அதனை படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா மறுத்துள்ளார்.



 



ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஒரு ஆட்டுக்கிடாவின் வாழ்க்கையை கதையாக சொல்லும் இந்த திரைப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்க  விதார்த் மற்றும் புதுமுகம்  ரவீனா ரவி ஆகியோர்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இந்த திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா, . "ஒருவேளை படத்தின் பெயர் சிலருக்கு, படம் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை புகார் கொடுக்க தூண்டி இருக்கலாம். ஆனால் இந்நாள் வரை  எந்த புகாரும் வரவில்லை என்பது தான் உண்மை.



 



இந்த படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டின்  கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி  முற்றிலும் காமெடியை மையமாக கொண்டு நாங்கள் எடுத்திருக்கும் இந்த படத்தில் எந்த ஆடும், மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை" என்று கூறியுள்ளார்.



 



அறிமுக இசையமைப்பாளர் ரகுராம் இசை அமைக்கும் இந்த திரைப்படத்திற்கு RV சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா