சற்று முன்

இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!   |    ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!   |    விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!   |    கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.   |    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!   |    ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி   |    நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்   |    இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!   |    இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)   |    'தி வில்லேஜ்' எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம் - நடிகர் ஆர்யா   |    'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குழுவின் நன்றி தெரிவிப்பு விழா!   |    அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் - நடிகை யாஷிகா ஆனந்த்!   |    ரஜினி ஜோடியாக நடித்த நடிகை முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஆலகாலம்'   |    கோலாகலமாக நடைபெற்ற “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!   |    25 லட்ச ரூபாயில் எடுக்க முடிந்த படத்திற்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள்!   |    ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம் - நடிகர் அரிஷ் குமார்   |    ஹைதராபாத்தில் அதிரடி ஆக்சன் காட்சியுடன் தொடங்கிய 'சூர்யாவின் சனிக்கிழமை'   |    விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் 'ஜூட் பீட்டர்'   |   

சினிமா செய்திகள்

’டீமன்’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மிகுந்த மகிழ்ச்சியில் இயக்குனர்!
Updated on : 21 September 2023

சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'டீமன்' படத்தினை தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.



 



'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவிய தலைவன்', 'ஜெயில்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.



 



படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது குறித்தது இயக்குநர் ரமேஷ் பழனிவேல் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் ‘டீமன்’ படத்திற்கான திரையரங்க எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 150 திரைகள் ’டீமன்’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. ரசிகர்களும் ஊடகங்களும் படத்தைப் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும்” என்றார். 



 



மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்க, கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ’டீமன்’  திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.



 



இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  



 



கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா