சற்று முன்

இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!   |    ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!   |    விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!   |    கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.   |    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!   |    ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி   |    நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்   |    இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!   |    இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)   |    'தி வில்லேஜ்' எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம் - நடிகர் ஆர்யா   |    'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குழுவின் நன்றி தெரிவிப்பு விழா!   |    அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் - நடிகை யாஷிகா ஆனந்த்!   |    ரஜினி ஜோடியாக நடித்த நடிகை முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஆலகாலம்'   |    கோலாகலமாக நடைபெற்ற “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!   |    25 லட்ச ரூபாயில் எடுக்க முடிந்த படத்திற்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள்!   |    ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம் - நடிகர் அரிஷ் குமார்   |    ஹைதராபாத்தில் அதிரடி ஆக்சன் காட்சியுடன் தொடங்கிய 'சூர்யாவின் சனிக்கிழமை'   |    விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் 'ஜூட் பீட்டர்'   |   

சினிமா செய்திகள்

'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்த ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை
Updated on : 23 September 2023

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் 'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷாருக் கானின் நடிப்பில் உருவான 'ஜவான்' உலகளவில் வெளியானது. இந்த திரைப்படம் - நடிகருக்கு சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில்   ஷாருக்கான் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அவரது ரசிகர்களுடன் ஈடுபாட்டுடன் அவர் நடத்தும் #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் தனது அறக்கட்டளையின் பணிகள் குறித்து பல  விசயங்களை பகிர்ந்து கொண்டார். இது பற்றி மேலும் அவரிடம் கேட்டபோது, '' நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த நம்மால் முடிந்தவரை பலருக்கு உதவுகிறோம். அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. ஆனால் மிகவும் உற்சாகமாக அவர்களிடத்தில் 'ஜவான்' திரைப்படத்தை திரையிடுமாறுச் சொன்னேன். இந்த வாரம் முழுவதும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 'ஜவான்' திரைப்படம் திரையிடப்படும்'' என பணிவுடன் பதிலளித்தார் ஷாருக்கான்.  ஷாருக்கானின் மீர் அறக்கட்டளையில் அமில வீச்சில் உயிர் பிழைத்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், வீதியோர குழந்தைகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடியின குழந்தைகள், மாற்று திறனாளிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.  பல நபர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்களுக்கு இது அவர்களின் முதல் திரையரங்க வருகையாகவும் இருந்தது. இதன் விளைவாக அவர்களிடத்தில் மகிழ்ச்சியான புன்னகையும் பூத்தது.  மகிழ்ச்சி மற்றும் மனதை கவரும் தருணங்களை தொடர்ந்து பரவ செய்வதற்காக.. ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை - நாடு முழுவதும் இதே போன்ற சிறப்பு திரையிடல்களை இந்த வாரம் முழுவதும் நடத்துகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா