சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.
பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.
ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…
மாரி சார் ரெட்ஜெயன்ட் மூவிஸ்க்கு எப்போது ஸ்பெஷல், எங்களுக்கு மாமன்னன் எனும் மாபெரும் வெற்றியைத் தந்தார். இப்போது வாழை மூலம் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் இணைந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. படத்தில் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையைத் தந்திருந்தார், கலை, திவ்யா, நிகிலா, என எல்லோரும் அட்டகாசமாக நடித்திருந்தார்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் பேசியதாவது…
வாழை ஹாட்ஸ்டாரின் முதல் திரையரங்குத் திரைப்படம், இன்னும் சில திரைப்படங்கள் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது. ரெட்ஜெயன்ட் மூவிஸுக்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள். இன்னும் 10 வருடத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் எத்தனை படங்கள் செய்தாலும், வாழை தனித்து நிற்கும், வாழை தமிழ் சினிமா வரலாற்றில், மிக மிக முக்கியமான படம். இப்படம் மூலம் மாரி என்ற நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி. மாரி தனித்துவமான கலைஞன். அவருடன் மீண்டும் ஒரு புராஜக்ட் செய்ய பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
ஸ்டன்ட் மாஸ்டர் சுப்புராயன் பேசியதாவது....
வாழையைத் தமிழகமே வாழ்த்துகிறது. இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் இருவரையும் மனதளவில் இத்திரைப்படம் பாதித்திருக்கிறது, அதனால் தான் இந்த அளவு அவர்கள் இந்தப் படத்தைப் பாராட்டுகிறார்கள். ஒரு படத்துக்கு எது முக்கியம் கதை, ஆனால் வாழையை நாவலாக எழுதியிருக்கலாம், குறும்படமாக எடுத்திருக்கலாம், ஆனால் அதை அருமையான ஒரு காவியமாக்கியுள்ளார் மாரி. வாழைக்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது, வாழையை மாரி இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார். மாரி எப்போதும் ஃபைட் எல்லாம் லைவாக இருக்க வேண்டும் என்பார், அதிலும் உணர்வுகள் இருக்க வேண்டும் என்பார், அவர் உழைப்பு தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்துள்ளது. அவருக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும், இந்தப் படத்திற்குத் தேசிய விருது கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவரும் மிகப்பெரும் உழைப்பைத் தந்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கலை இயக்குநர் குமார் கங்கப்பன் பேசியதாவது…
இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த நடிகை, நடிகையர் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நவ்வி ஸ்டூடியோஸ் இன்னும் பல படங்கள் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
எடிட்டர் சூர்ய பிரதமன் பேசியதாவது…
முதன்முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டிராஃப்ட் படிக்கும்போது, நான் இந்தப்படத்தின் எடிட்டராக இருப்பேன் என்பதே தெரியாது, இந்த படம் தந்த எமோஷனல் ஜர்னி வித்தியாசமானது. எடிட்டிங்கில் சிவனைந்தனின் ஆரம்பக் கட்டம் மகிழ்ச்சியாக இருந்தது. கிளைமாக்ஸ் முற்றிலும் புதிதானது, கிளைமாக்ஸ் ஷூட் கூட்டிப்போனார், அதை எடிட் செய்யும் போது, அந்த மரண ஓலம் தான் கனவிலும் வரும். கிளைமாக்ஸ் சரி வராமல் தவித்தோம். குடுகுடுப்பை சத்தம், பறவையின் சத்தம் வையுங்கள் அது தான் கிளைமாக்ஸ் என்றார் அது வந்தவுடன் கிளைமாக்ஸ் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசியதாவது…
வாழை பற்றி நிறையப் பேசிவிட்டார்கள், அனைவருக்கும் நன்றி மட்டும் தான் சொல்ல வேண்டும். இந்தப்படத்தை எங்களை நம்பித் தந்த மாரி செல்வராஜுக்கு நன்றி. நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் இன்னும் மனதிலேயே இருக்கிறது. எல்லா உதவி இயக்குநர்களும் வாழை மாதிரி ஒரு படம் என தங்கள் கதையைச் சொல்லும் படி, ஒரு பெஞ்ச்மார்க்கை உருவாக்கி விட்டார் மாரி. வாழ்த்துக்கள்
நடிகர் கலையரசன் பேசியதாவது…
இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. வாழை என் வாழ்வில் மிக முக்கியமான படம், இன்டஸ்ட்ரியிலிருந்து நிறையப் பேர் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள், எல்லோர் மனதை பாதித்திருந்தால் தான் இந்த பாராட்டு வரும். முதல் நாளிலிருந்து அனைவரும் இப்படத்திற்கு, நேர்மையாகப் போட்ட உழைப்பு தான் இந்த வெற்றிக்குக் காரணம், அனைவருக்கும் என் நன்றிகள்.
திலீப் சுப்பராயன் பேசியதாவது…
ஆக்சன் மாஸ்டராக போய், தயாரிப்பாளராக மாறியது மிக நெகிழ்வான தருணம். மாரி சார் ரைட்டிங்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும், வாழை ஏன் மிக முக்கியம் என்றால், ஏற்கனவே ஒரு படம் செய்து தோற்றிருக்கிறோம், ஆனால் சினிமா தந்தது, என ஏற்றுக்கொண்டேன், ஆனால் அதுவே இப்போது எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. சினிமாவை நேசித்தால், அது திரும்பத் தரும். நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. மாரி சாருக்கு நன்றி. தெலுங்கில் ஒரு ஷூட்டில் படம் பார்த்த எல்லோரும் மனமுருகி இப்படத்தைப் பாராட்டினார்கள், பத்திரிக்கையாளர்கள் கொண்டாடினார்கள், அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது…
மிக நிறைவான விழாவில் இருக்கிறேன், புளூஸ்டார் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான விழா. மாரி சார் முதல் நாள், உன் கேரியரில், உனக்கு ஒரு நல்ல படம் தருவேன் என்றார். அவரை மட்டும் நம்பித்தான் இந்த படத்திற்குள் போனேன். அதனை நூறு சதவீதம் நிறைவேற்றி விட்டார். மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னுடன் உழைத்த கலைஞர்கள் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…
பரியேறும் பெருமாளுக்குப் பிறகு வாழை படத்திற்கு, பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருந்தேன். நீங்கள் மிகப்பெரும் ஆதரவைத் தந்துள்ளீர்கள் நன்றி, 2012 ல் ஃபிலிம்மேக்கராக ஆரம்பித்த ரஞ்சித், மாரி, நலன் என எல்லோரும் நல்ல படம் செய்து, மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளார்கள். மகிழ்ச்சி. ஒரு நல்ல கதை, வசூலிலும் சாதிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. வாழை என்னுடைய ஃபேவரைட் படங்களில் எப்போதும் இருக்கும், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகை நிகிலா விமல் பேசியதாவது…
பூங்கொடி பாத்திரத்தைத் தந்ததற்கு மாரி சாருக்கு நன்றி. மாரி சார் வாழக்கையை வாழ்வது கஷ்டம், ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் படமாகத் தந்துள்ளார், அதில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. எனக்கு அழகிய லைலா போலப் புகழ் கிடைப்பதை விட, பூங்கொடியைக் கொண்டாடுவது தான் மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் உடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் குடும்பம் மாதிரி, தமிழில் அவருடன் தான் நிறையப் படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த குடும்பத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றிகள்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…
என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள். நன்றி. நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள். திலீப் மாஸ்டர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாய் என்பார், ஆனால் ஃபைட்டில் நான் எப்போதும் உணர்வைக் காட்சிகளைச் சேர்த்து வைப்பேன், அதற்கான சுதந்திரம் தருவார். நான் படம் எடுப்பேன் அதில் ஃபைட் இருக்காது என்பார், அப்போதிருந்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். வாழை பார்த்து நானும் இணைந்து செய்கிறேன் என்றார். அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். நன்றி. என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள். இந்த பையன்களை என்னவேணாலும் செய்ய வைக்க முடியும் எனத் தெரியும், ஆனால் நடிகர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டேன், நிறைய அவர்களைத் துன்புறுத்தியுள்ளேன், ஆனால் அதைப் புரிந்துகொண்டார்கள். நிகிலா விமலை முதலில், வேறு படத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்தேன், இது தான் என் வாழ்க்கையின் பெரிய படம் எனச் சொல்லி, நடிக்க வைத்தேன். ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள், ஆனால் அப்போது அவரது டேட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன். இந்தப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருந்தது, படம் பார்ப்பவர்கள் என்ன உணர்வோடு செல்வார்கள் என நினைத்துத் தான் பாட்டை படமாக்கினேன். அப்போது சிவனைந்தன் டீச்சர் மடியில் படுத்து அழுவதாகத் தான் காட்சிகள் இருந்தது. அதை எடுத்திருந்தால் இப்போது வரும் சர்ச்சைகள் இருந்திருக்காது. என்னைப்பற்றி கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான பதில் தான் வாழை படம். இன்னும் பல படங்கள் எடுத்துக்கொண்டே இருப்பேன், நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன் நான் ஓய்வு பெறும் போது, அடுத்துக் கதை சொல்ல ஆட்களைத் தயார் செய்திருப்பேன். அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். நீ ஏன் வலியைச் சொல்கிறாய் ? பெருமை இல்லையா ? என்கிறார்கள். இதோ இந்த பசங்க தான் என் பெருமை. இன்னும் இன்னும் பல கதைகள் வரும். என் வாழ்க்கையைக் கலையாக மாற்றியிருக்கிறேன் இந்த கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன். நன்றி.
ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’.
மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மாதேஷ் பேசும்போது, “ஜென்டில்மேன் படம் துவங்கிய காலத்திலிருந்தே ஏ.ஆர் ரஹ்மான் வீட்டில் நாங்கள் சாப்பிட்டு வாழ்ந்த அனுபவம் உண்டு. அதன் பிறகு சாக்லேட் படம் பண்ணும் போது மல மல பாடலை பாட வைக்க நிறைய பேரை ஆலோசித்து இறுதியாக ஏ.ஆர் ரெஹைனா அந்த பாடலை பாடினார். அவரது குரலால் அந்த பாடலுக்கு கிடைத்த வீச்சு உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏ.ஆர் ரெஹைனா யாரிடம் பேசினாலும் எப்போதுமே கலையைப் பற்றித்தான் அவரது பேச்சு இருக்கும். அவரது கலைப்பயணம் தன்னுடனே நின்று விடாமல் இருக்கும் விதமாக தேசிய விருது பெற்ற ஒரு மகனையும் இந்தத் துறையில் களம் இறக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்த ஒரு மகளையும் கொடுத்துள்ளார். தேசிய விருதை நோக்கி அவருடைய பயணம் இருக்க வேண்டும்” என வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் எங்கே இருக்கிறது ? உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.
இதில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு டீனேஜ் பெண் போல தான் பாடி இருக்கிறேன். கவிஞர் ருத்ரா இந்த பாடலை எழுதியுள்ளார். தோசை சுடுகின்ற வேகத்தில் பாடல் எழுதி விடுவார். ரம்யா இந்த ஆல்பத்தின் டிராக்கை பாடியுள்ளார். எமில் மிகத் திறமையானவர். அனிருத், ரஹ்மான் போன்று வரக்கூடியவர். எதனாலோ தெரியவில்லை அவரது திறமை வெளியே தெரியாமல் அமுங்கிக் கிடக்கிறது. அனேகமாக இதுபோன்ற சுயாதீன ஆல்பங்களில் அவரது பெயர் பெரிதாக வரும் என எதிர்பார்க்கிறேன்.. கனடாவில் அவர் பெரிய ஆளாக இருப்பது போல இங்கே இந்தியாவிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். மணி வி வி நாயர் இதை இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் கூப்பிட்டதுமே உடனே ஓடோடி வந்த பாப் ஷாலினிக்கு நன்றி. அவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பாகவே நிறைய பாப் பாடல்கள் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நான்கு வரிகள் தான் முதலில் பாடினேன். அதைக் கேட்டு விட்டு ஏ.ஆர் ரஹ்மானிடம் இந்த குரல் யாருடையது முழு பாடலையும் பாட வையுங்கள் என்று கூறிவிட்டார். அதுவே எனக்கு ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது போன்றது. மணிரத்னம் படங்களில் நான் பாடிவிட்டால் என் பாடலை தூக்கக்கூடாது என விட்டுவிடுவார். அதன்பிறகு மாதேஷ் என்னை நம்பி ஒரு முழு பாடலை கொடுத்து ரசிகர்களுக்கு இன்னும் என்னை அடையாளம் காட்டினார்” என்றார்.
பின்னணி பாடகி பாப் ஷாலினி பேசும்போது, “ஏ.ஆர்.ரெஹைனாவை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரிடம் எப்போதும் ஒரு உற்சாகம் இருக்கும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஒரு ஆர்வம் இருக்கும். இப்போது சுயாதீன பாடல்கள் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது இந்தப் பாடலை பார்த்ததும் ஆடல், பாடல், நடிப்பு என அவர் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் என தெரிகிறது.: என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும்போது, “ஏ.ஆர்.ரெஹைனா பற்றி பேச வேண்டுமென்றால் சரஸ்வதியே கீழே இறங்கி வந்து பாடினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருப்பார். ஒரு பக்கம் அவர் திறமையின் உச்சம் என்றால் இன்னொரு பக்கம் இந்த திரைத்துறையில் அவரை மதர் தெரசா என்று சொல்லலாம். ஒரு திறமையான கலைஞராக மட்டுமல்ல அற்புதமான மனிதராக, மனித நேயம் கொண்டவராகவும் அவரை பார்க்கிறேன். அவரை பார்த்து நான் மயங்கிய ஒரே விஷயம் என்றால் அவருடைய உதவும் குணம், அறக்கட்டளை பணி தான். இந்த ஆல்பம் மூலமாக கூட எத்தனை பேருக்கு நல்லது பண்ண முடியும் என்பதுதான் அவர் எண்ணம். அதைக்கூட விளம்பரப்படுத்தாமல் செய்து வருகிறார். பல பேருக்கு இந்த விஷயமே தெரியாது.
இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும்போது ஒரு சர்வதேச பாடகர் பாடியது போன்று இருக்கும். யாராலும் இந்த லெவலில் பாட முடியாது. அந்த அளவிற்கு இதை சர்வதேச ஆல்பம் என்றே சொல்லலாம். ஒரு ஆல்பமோ அல்லது படமோ பெரிதாக வரும்போது இந்த திரைத்துறைக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன. பெரிய வருமானங்களும் பல பேருக்கு வாய்ப்புகளும் கிடைக்கின்றன” என்று கூறினார்.
நடிகை சுகாசினி பேசும்போது, “இது வித்தியாசமான படைப்புகள் உருவாகும் ஒரு காலகட்டம் என்று சொல்லலாம். முன்பு சினிமா, நாடகம் மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்று நிறைய தளங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது தான் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல கலைஞர்களை கண்டுபிடிக்க முடிகிறது. இந்த சின்ன பையன் சாய் அபயங்கர் திப்பு-ஹரிணியின் மகன் என்பது எனக்கு தெரியவே தெரியாது. என்னுடைய படத்திற்காக ஹரிணியை அழைத்து வந்து நிலா காய்கிறது பாடலை பாட வைத்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
இந்தப் பாடலின் இசை எங்கே போய் சேர வேண்டுமோ அதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. சில புத்திசாலித்தனமான இயக்குனர்கள் என்னிடம் கேட்கும்போது, என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை அந்த சமயத்தில் வெளியான பிரபலமான பாடல் அந்த சூழ்நிலைக்கு எது சரியாக பொருந்துமோ அதை வைத்து தான் அந்த நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்று கூறினேன். சங்கீதம் இல்லை என்றால் என்ன வாழ்க்கை இருக்கிறது ? சங்கீதம் தான் எல்லாமே. 1997ல் நான் சுகம் இல்லாமல் இருந்தபோது அடிக்கடி என் வீட்டிற்கு வந்து நான் குணமடைய வேண்டும் என்பதற்காக நான் படுத்திருந்த இடத்தில் ஏ.ஆர் ரெஹைனாவின் அம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு செல்வார்கள். அந்த தாயின் ஆசிர்வாதத்துடன் ஏ.ஆர் ரெஹைனாவின் எதிர்காலம் இன்னும் பிரகாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று கூறினார்
பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது, “நான் முதன்முதலில் பண்ணிய ஆல்பம் ரீங்காரம். அதற்கடுத்து ழா என்கிற பாடல் பண்ணி இருந்தேன். சுயாதீன ஆல்பங்கள் என்பது எப்போதுமே எங்களுக்கு விருப்பமானது. இந்த மாத்திக்கலாம் மாலை பாடலில் என்ன புதுமை என்று கேட்டால் புதுமை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வேலை செய்துவிட்டு களைத்துப் போய் வரும் தொழிலாளிகளுக்கு இது போன்ற பாடலை பார்க்கும்போது அவர்களது மூட் அப்படியே மாறிவிடும். அவர்களுக்கு அடுத்த நாள் உற்சாகம் தருவதே இதுபோன்ற பாட்டுக்கள் தான்.
நான் இப்படி படபடவென பேசுவதற்கு காரணம் கொஞ்ச நாள் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துள்ளேன். அதன்பிறகு சின்மயி மூலமாக ஆர்ஜேவாக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்து இப்படி மாறி விட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த பாடலை அனுப்பி வைத்தேன். அவர்தான் பெரிதாக பேச மாட்டாரே. ஒரு தம்ஸ் அப் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தார்.
இது இந்த புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஆல்பம். உலக அளவில் பார்க்கும்போது இசையமைப்பாளர்கள் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இங்கே நாம் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறோம். படத்திலும் பாடல்களை குறைத்து விட்டால் இசையமைப்பாளர்கள் எங்கே செல்வார்கள் ? அதனால் தான் நாங்களே பாடல் காட்சிகளில் தோன்ற ஆரம்பித்து விட்டோம். அதற்காக ஹீரோயினாக நடிப்பேன் என்று நினைத்து விட வேண்டாம். என் பாட்டுக்கு மட்டும் தான் நான் ஹீரோயின். எனக்கு என்ன பொருந்துமோ அதைத்தான் பண்ணுகிறேன். சில பேரை தூங்க வைப்பதற்காக தான் பாட்டு என்றாலும் தூங்காமல் இருக்கும் சிலருக்காக இது போன்ற பாட்டுக்கள் தேவை. ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தான் இந்த பாடலை படமாக்கினோம்.
இந்த பாடலை ரிலீஸ் வீடியோக்களாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன அதில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்
சாலிகிராமம் அப்புசாலி தெருவில் புதிதாக கரீமா டைனிங் ஸ்பாட் என்கிற பிரியாணி கடை துவங்கியுள்ளேன். அருமையான பிரியாணி அங்கே கிடைக்கும். ஆயிரம் பிரியாணி கடைகள் இருந்தாலும் என்னுடைய டேஸ்ட்டுக்கு என் வீட்டிற்கு பிடித்த மாதிரி அது இருக்கும். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் அம்மா அவர்களை வரவேற்று உபசரிப்பார். அவரது பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல். அவரிடம் இருந்து நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என சொல்லலாம். அவரது ஞாபகார்த்தமாகத்தான் இந்த கடையை துவக்கி உள்ளேன்” என்றார்.
திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம், வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது.
பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடுகளான 'ரகுதாத்தா', 'நுனக்குழி' உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து, இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் "டிமான்ட்டி காலனி 2" படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் "டிமான்ட்டி காலனி 2" படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்தப் படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில், பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் நிறுத்திய, 'டிமான்ட்டி காலனி 2', ஒரு பயங்கரமான தலைசிறந்த ஹாரர் படைப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து, தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெற்றது. செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் மட்டும், லார்ட் டிமான்டேவின் வருகையைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள்!
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
'டிமான்ட்டி காலனி 2' படத்தினை எங்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக ZEE5 இல் தமிழ் மற்றும் தென்னிந்திய உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் முந்தைய படத்தின் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, முதல் படத்தினை விடவும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
திரையரங்குகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், இப்போது ZEE5 இல் பெரிய அளவிலான பார்வையாளர்களே சென்றடைவது மகிழ்ச்சியளிக்கிறது. ZEE5 மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த அனுபவத்தை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய ZEE5 நம்பமுடியாத தளத்தை வழங்குகிறது. இந்த பரந்த ரீச் எங்கள் படத்தை, இன்னும் கூடுதலான திகில் ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கும், மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, இந்த அட்டகாசமான அனுபவத்தைப் பெறலாம். ரசிகர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகரான அருள்நிதி கூறுகையில்..,
“டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது. மேலும் ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இந்த இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது. திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ZEE5 மூலம் இந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தையும் மாறுபாட்டையும் பரந்த பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'
Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது..,
செந்தூர் பிலிம்ஸின் 7 வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆனால், விஜய் ஆண்டனி சாருக்கு எதிர்பாரா விதமாக விபத்து நடைபெற்றது. யாராயிருந்தாலும் ஒரு வருடம் வரமாட்டார்கள், அதைத்தாண்டியும் அவர் ஒரு மாதத்தில் வந்து எங்களுக்காக நடித்தார். ரிலீஸ் வரை, பிஸினஸ் முதற்கொண்டு உறுதுணையாக இருந்தார். இயக்குநர் தனா மிகக் கடினமான உழைப்பாளி, அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். கௌதம்மேனன் சார் எங்களுக்காக வந்து நடித்துத்தந்தார். படம் மிக நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,
இப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தந்த, இசையமைப்பாளர், இயக்குநருக்கு என் நன்றிகள். எனக்கு நிறையப் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு தரும் விவேக் மெர்வினுக்கு நன்றிகள். என் பாடலை விஜய் ஆண்டனி சார் பாடியிருப்பது எனக்குப் பெருமை, இப்படிப் பட்ட மிகச்சிறந்த குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி.
இயக்குநர், நடிகர் தமிழ் பேசியதாவது..,
தயாரிப்பாளர் ஒரு ஹீரோவைப்பார்த்து மாமனிதன் எனச் சொல்கிறார் என்றால், அவர் எத்தனை நல்லவராக இருக்கிறார் என்பது புரிகிறது. விஜய் ஆண்டனி சார், எப்போதும் தயாரிப்பாளரின் ஹீரோவாக இருக்கிறார். எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் சார், இயக்குநர் தனா தனக்கு என்ன வேண்டுமோ, அதைத் தெளிவாக எடுத்து விடுவார், எனக்கு இப்படத்தில் நல்ல ரோல் தந்துள்ளார். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..,
இயக்குநர் தனா மணிரத்னம் சாரிடம் இருந்து வந்தவர், இவரிடம் ரைட்டிங் இன்னும் பலமாக இருக்கும், படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையில் விவேக் மெர்வின் நல்ல பாடல்கள் தந்துள்ளார்கள். விஜய் ஆண்டனி சார் எப்போதும் கதைக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கிறார், அதனால் தான் எல்லா இயக்குநருக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார். கௌதம் மேனன் சார் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மாதிரி திரையில் ஸ்டைலாக நடிக்க ஆசை, இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது...,
தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. ஒரு நாள் போன் செய்து, இந்த மாதிரி ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமெனக் கேட்டார்கள், நானும் சரி எனச் சொல்லிவிட்டேன், ஆனால் பிருந்தா மாஸ்டர் பாட்டு கேட்டீர்களா எனக்கேட்டார், அப்போது தான் பாட்டு கேட்டேன். ஸ்பீட் சாங், நிறைய பீட் இருந்தது, எனக்குப் பயமாக இருந்தது. தனா சார் தைரியம் தந்து ஆட வைத்தார். இந்தப்பாடல் கண்டிப்பாகப் பிடிக்கும். படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் கிருத்திகா பேசியதாவது..,
இயக்குநர் தனா எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு போன் செய்து, ஒரு ஐட்டம் சாங் எழுதனும் என்றார், ஒரு பெண்ணிடம் கூப்பிட்டு, ஐட்டம் சாங் விரசமில்லாமல் எழுதச் சொல்வதே, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியதாவது..,
தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் தனா இருவருக்கும் நன்றி. எனக்கு இந்தப்படத்தில் உறுதுணையாக இருந்து, ஆக்சன் காட்சிகளை நன்றாகச் செய்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர் இருவருக்கும் நன்றிகள். கௌதம் மேனன் சார் படத்தில் வேலை உதவியாளனாகப் பார்த்திருக்கிறேன், அவரை இந்தப்படத்தில் வேலை வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.
கலை இயக்குநர் உதயகுமார் பேசியதாவது...
செந்தூர் பிலிம்ஸில் எனக்கு இது மூன்றாவது படம், ராஜா சார் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார் நன்றி. என் குரு கதிர் சார் தான் இந்தப்படம் செய்வதாக இருந்தது. கதை கேட்டேன், பிரம்மாண்டமாக இருந்தது, இயக்குநர் கேட்டதை, இந்தப்படத்தின் கலர் பேலட்டுக்கு ஏற்றவாறு செய்து தந்தேன், முதல் நாளே பாராட்டினார். இயக்குநர் நல்ல ஆதரவு தந்தார். அனைவருக்கும் நன்றிகள்.
எடிட்டர் சங்கத்தமிழன் பேசியதாவது..,
வானம் கொட்டட்டும் படத்திலிருந்து, தனாவுடன் வேலை செய்து வருகிறேன். மிக நல்ல நண்பர், மிகச்சிறந்த இயக்குநர். எனக்குப் பிடித்த நடிகர் விஜய் ஆண்டனி, அவர் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கௌதம் மேனன் சார் கேரக்டர், இந்தப்படத்தில் ரொம்ப நன்றாக இருக்கும். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது..,
ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம், விவேக் முக்கிய வேலையால் வர முடியவில்லை. இப்படி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் எங்களைத் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநருக்கு நன்றி. படம் ஆரம்பித்த முதல் நாளே, எங்களை பாராட்டி ஊக்கம் தந்த, தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன் கமர்ஷியல் படமாக இருக்கும். நன்றி.
நடிகை ரியா சுமன் பேசியதாவது..,
இந்தப்படம் மனதுக்கு மிக நெருக்கமான முக்கியமான படம். எனக்கு மிக நல்ல ரோல் தந்த தனா சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி சார் எப்படி இப்படி முழுக்க பாஸிடிவிடியுடன், நல்ல மனிதராக இருக்க முடியுமென ஆச்சரியப்பட்டுள்ளேன். இப்படத்தில் உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி. கௌதம் சார் படங்கள் அவ்வளவு பிடிக்கும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் உடன் நடித்த, மற்றும் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் கௌதம் மேனன் பேசியதாவது..,
இந்தப்படம் பண்ண ரெண்டே காரணம் தான். தனா, அவர் விஜய் ஆண்டனி நீங்கள் தான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் என்று சொன்னார். பொதுவாக நான் நடிக்கத் தயங்குவேன், எனக்கு இந்தப்படத்தில் அவ்வளவு கம்பர்டபிளாக வைத்துக் கொண்டார்கள். விஜய் ஆண்டனி ஆசைப்பட்டதால் தான் இந்தப்படத்தில் நடித்தேன் நன்றி. இந்தப்படத்தில் மிகப்பெரிய கதை இருக்கிறது, அதை தனா இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் ஆண்டனி விபத்தைத் தாண்டி ஒரே மாதத்தில் நடிக்க வந்தது வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இப்படம் இருக்கும்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப்படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது. விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் தனா பேசியதாவது..,
இந்தப்படம் ஒரு நல்ல ஆக்சன் படம், ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக்கதையைச் சிறப்பாகச் செய்தேன். ராஜா சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் கம்ர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது.
'அரண்மனை' பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கி வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட இயக்குநர் சுந்தர் சி- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2 'எனும் திரைப்படத்தினை இயக்குவதால், இந்தத் திரைப்படமும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் முதல் பாகத்தை விட, பல அற்புதமான திரையரங்க அனுபவ தருணங்களை வழங்கும் வகையில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுந்தர் சி - வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் -நயன்தாரா கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகை தேவதர்ஷினி பேசும்போது,
“96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம் இது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போது, இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என இயக்குநர் பிரேம்குமார் கூறியதும் இரண்டு நாட்களுக்கு எனக்கு பேச்சே வரவில்லை. இந்த படத்தில் இருந்து ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள். 96ல் நமக்கு நடந்த அனுபவம் இதிலும் வேறு விதமாக தொடரும். பொதுவாக யாராவது ஒரு பெண்ணிடம் நீ என்ன ஐஸ்வர்யா ராயா என்றால் அதே போல ஆணிடம் நீ என்ன அர்விந்த்சாமியா என்று கேட்பதுதான் வழக்கம். அந்த அளவிற்கு கல்லூரியில் படிக்கும்போது அர்விந்த்சாமியின் தீவிர ரசிகையாக இருந்தேன். எங்களது கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது அவரை எப்படியாவது பார்த்து விட பல வழிகளில் முயன்றேன். ஆனால் அவரது கால் நகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அவருடனேயே இணைந்து நடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. நான் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடிப்பது குறித்து எனது சில கல்லூரி தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பிய போது சில பேர் கோபத்தில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவரை தமிழ் திரைப்படங்கள் பார்த்த எல்லோருக்குமே கார்த்தி இந்த படத்தில் செய்திருக்கும் கதாபாத்திரம் மிகமிக பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நியாயம் செய்துள்ளார் கார்த்தி” என்றார்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ் பேசும்போது,
“கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அர்விந்த்சாமி சார் எங்களை திருச்சியில் விருந்துக்காக அழைத்துச் சென்றார். அங்கே தான் அவருடைய வேறு ஒரு முகத்தை முதன்முறையாக பார்த்தேன். எங்களை மட்டும் அல்லாமல் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் அக்கறையுடன் விசாரித்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சாதாரண நாள் அன்று சிறப்பு நாளாக மாறிவிட்டது. அப்படி அவர் காட்டிய சின்ன சின்ன அன்பை உண்மையிலேயே மறக்க முடியாது. இந்த படத்தை பார்த்ததும் கார்த்தி சாரை போன்ற ஒருத்தர் நம் கூடவே வாழ்நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணரும்படியாக அவரது கதாபாத்திரம் இருக்கும். அதை நாங்கள் படப்பிடிப்பில் நிஜத்திலேயே உணர்ந்தோம். கார்த்தி, அரவிந்த்சாமி, பிரேம்குமார் இந்த மூன்று பேர் கூட்டணியில் உருவாகும் படத்தில் என்னுடைய பங்கும் ஒன்று இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,
“2டி நிறுவனத்துடன் 36 வயதினிலே படத்தில் முதன்முறையாக இணைந்தோம். அதற்கு அடுத்ததாக இப்போது மெய்யழகனில் இணைந்துள்ளோம். 96 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமாருடனும் இது எங்களுக்கு இரண்டாவது படம். அதேசமயம் கார்த்தி சாருடன் எங்களுக்கு இது ஐந்தாவது படம். இந்த படத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு வாரம் என்னால் வெளியே வரவே முடியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது, என்னுடைய உறவினர்கள் அனைவரும் இருப்பது எல்லாமே சென்னையில் தான். ஆனால் மெய்யழகன் படத்தை பார்த்தபோது தீபாவளி, பொங்கல் நல்ல நாட்களை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகிறவர்களின் உணர்வை என்னால் அழகாக புரிந்து கொள்ள முடிந்தது. மெய்யழகன் படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் சார்ட் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
“சென்னையை இரண்டாவது தாய்மடி என்று சொல்வார்கள். என்னதான் இங்கே எல்லாமே கிடைத்தாலும் நமக்கு சொந்த ஊரில் தான் அதிகம் கிடைத்திருக்கிறது. விசேஷ நாட்களில் இங்கிருந்து நாம் சொந்த ஊருக்கு செல்லும் போது அந்த ஊருக்கும் நமக்குமான பிணைப்பு, அப்பா அம்மாவுக்கும் நமக்குமான பிணைப்பு என இந்த விஷயத்தை மிகச் சரியாக, மிக நுட்பமாக கையாண்ட திரைப்படம் இதுவரைக்கும் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஒன்று நகரத்தை நோக்கிய படமாக இருக்கும். அல்லது கிராமத்தை நோக்கிய படமாக இருக்கும். கிராமத்தையும் நகரத்தையும் பக்காவாக இணைத்துள்ள படம் தான் இது.
ஒரு நகரவாசியாக இந்த மெய்யழகன் படத்தை உங்களால் நூறு சதவீதம் ரசிக்க முடிந்தால் முழுக்க முழுக்க கிராமத்தில் இருக்கும் ஒருவராலும் இந்த படத்தை அழகாக ரசிக்க முடியும். எல்லோரும் வாசித்து மனதில் பதிந்த பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்தார்கள். ஆனால் இந்த மெய்யழகன் படத்தைப் பார்க்கும்போது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமமாக இருக்கும். படம் வெளியான பிறகு அர்விந்த் சாமியை ஒரு நடிப்பு அரக்கனாக பார்க்க முடியும். அவரது கதாபாத்திரத்தை அந்த அளவிற்கு வியந்து பார்ப்பீர்கள். இந்த படத்தின் ஒரு இடத்தில் கூட சோகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போது பல இடங்களில் உங்களை அறியாமலேயே அழுவீர்கள். நல்ல படங்களை பார்த்ததும் அதை உச்சி முகர்ந்து வரவேற்கும் பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் றெக்கை கட்டி பறப்பார்கள்” என்று கூறினார்.
நடிகை ஸ்ரீதிவ்யா பேசும்போது,
“96 படம் எந்தவிதமான மேஜிக்கை நிகழ்த்தியது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் அதுபோல என்ன செய்யப் போகிறது என்று பார்ப்பதற்கு உங்களை போல நானும் ஆவலாக இருக்கிறேன். எனக்கு ரொம்ப நாள் கழித்து இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. கமல்ஹாசனின் அருமையான பாடல் வேற லெவலில் இருக்கிறது. கேட்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருந்தேன். என்னை அறியாமலேயே என் சின்ன வயதிற்கு சென்று விட்டேன். அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அந்த உண்மையான அன்பை அதற்குப் பிறகு இப்போது வரை அனுபவித்ததில்லை. இதுவரைக்கும் அந்த உண்மையான அன்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். அது கிடைத்ததில்லை. அதை இந்த பாடல் தொட்டது. இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது,
“96 படத்திற்கு பிறகு 6 வருடம் கழித்து இப்போதுதான் மீடியா முன் நிற்கிறேன். கடந்த நவம்பர் மாதம் படத்தை தொடங்கி இந்த செப்டம்பரில் அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம். 96 படத்தில் நடித்த நட்சத்திரங்கள் யாரும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவதர்ஷினியை தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அதேபோல முதலில் இந்த படத்தில் இருக்கும் ஒரு தங்கை கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதிவ்யாவை அணுகினோம். அந்த சமயத்தில் அவரிடம் தேதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து இப்போது அவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக அணுகியபோது உடனே ஓகே சொன்னார். இந்த நேரத்தில் ஏன் இந்த படம் என்றால்..!
சமீப காலமாக சோசியல் மீடியாக்களிலும் வெளியிடங்களிலும் வெறுப்பு சிந்தனை பரவி வருவதை பார்க்க முடிகிறது. அன்பு தான் இதை மாற்றும். இந்த படம் அன்பை பற்றி பேசுகிறது. படத்தின் டைட்டிலில் இருந்து எல்லா விஷயங்களிலும் தமிழை முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு காரணம் தமிழ் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டே இருக்கிறது. மெய்யழகன் படம் அதை மாற்ற முயற்சி செய்யும்” என்று கூறினார்.
நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,
“இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன். கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்த போது மட்டுமல்ல, அதன் பிறகு தற்போது வெளியேயும் நல்ல உறவில் நெருக்கமாகி விட்டோம். கார்த்தி அண்ணா என்னைப் பற்றி உங்களிடம் ஏதாவது சொல்வார். ஆனால் அதை எல்லாம் நம்பாதீர்கள். அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பதாக சொன்னீர்கள் ஆனால் அப்படி கேட்பவர்களுக்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது என்று நினைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
“96 எல்லோருக்கும் பிடித்த படம். கதை, உரையாடல் என ஒவ்வொரு விஷயத்தையும் பிரேம்குமார் பார்த்து பார்த்து இழைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நாள் ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் தான், பிரேம்குமார் இப்படி மெய்யழகன் படத்திற்காக பிரேம் ஒரு கதை வைத்திருக்கிறார் என என்னிடம் கூறினார். உடனே அவரை நானே நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். 96 படம் வெளியான பிறகு இந்த கதைக்காகவே ஆறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் பிரேம் குமார். எப்படி அவரை தயாரிப்பாளர்கள், மற்ற ஹீரோக்கள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. இதிலிருந்தே அவர் புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி பொருட்காட்சியில் இருக்கும் ஒரு அரிய பொருளை போன்றவர் அவர்.
இந்த ஸ்க்ரிப்ட்டை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் கொட்டியது. அனேகமாக கோவிட் சமயத்தில் இந்த கதையை பிரேம் எழுதியிருப்பார் போல. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் என சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்கு செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். எல்லோரும் இந்த படத்தில் எப்படி நடித்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு கமர்சியலான படம், இதில் ஏன் நான் நடிக்க கூடாது ? கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார் அதற்கடுத்து இப்போது இந்த மெய்யழகன் படத்தில் தான் பல நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில்ல் கலந்து கொண்டேன். ஆனால் இதில் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை.
நானும் அர்விந்த்சாமி சார் பேசும்போது கூட இந்த காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை அப்படியே குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். படம் முழுவதும் அத்தான் அத்தான் என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் ஒரு கதாபாத்திரம் எனக்கு. திண்டுக்கலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே உள்ள பேமஸான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை 8 மணிக்கே பிரியாணி வாங்கி கொடுத்து அசத்தினார்.
96 படத்தின் காதலே காதலே பாடல் இப்போதும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. அதுபோல மெய்யழகன் பாடலையும் ஊருக்குப் போகும்போது கேட்டுக்கொண்டே போவார்கள். இந்த பாடலுக்கு கமல் சாரே ஏற்படுத்திய வேல்யூவுக்கு நன்றி. ராஜா சார் காதல் இல்லாமல் பிரேம்குமார் கதையை எழுதவே மாட்டார்.. இதிலும் அது நடந்திருக்கு” என்று கூறினார்.
நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி
Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் …
ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது...
முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சமுத்திரகனியுடன் பணியாற்றியதும் நல்ல அனுபவம். ஜிப்ரானின் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
எடிட்டர் நெல்சன் ஆண்டனி பேசியதாவது...
எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அண்ணன் சசிகுமார் படங்களை ரசிகனாக பார்த்திருக்கிறேன் அவரது படத்தை ரஷ்ஷாக பார்த்து, எடிட் பண்ணியது புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநருக்கு தான் நன்றி. பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள் இங்கு இவர்களுடன் இருப்பதற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
கலை இயக்குநர் உதயகுமார் பேசியதாவது...
இந்தப் படத்தில் என்னை பரிந்துரை செய்த இணை இயக்குநர் குரு அவர்களுக்கு நன்றி. அண்ணன் சசிகுமார் அவர்களுடன், நான் மூன்று வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் வினோத் அவர்களின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நான் அசிஸ்டெண்டாக பணியாற்றினேன். அவர் இருக்கும் மேடையில் கலை இயக்குநராக நான் இருப்பது, எனக்கு பெருமை. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் நிலா சுதாகர் பேசியதாவது...
இத்திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சரவணன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக. இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள், மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். வாழ்வியலைச் சொல்லும் படமாக, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சரவணன் மற்றும் சசிகுமார் அவர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மகிழ்ச்சி. படத்தில் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது, உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
Think Music சந்தோஷ் பேசியதாவது...
இந்த மேடை ரொம்ப ஸ்பெஷல். இரா. சரவணன் மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார், நீங்கள் பாருங்கள் என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் பிக்ஸ் செய்யாமல் இருந்தது, எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூட செய்யாமல், அந்த படத்தை பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் இப்படி எல்லாம் ஊர் பக்கம் நடக்கிறதா? என்று கேட்டேன். ஆம் ஊர் பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம் என்றார்கள். படத்திற்கு இசை பற்றி பேச்சு வந்தது, எனக்கு ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. சரவணனும் அவர் கண்டிப்பாக சரியாக இருப்பார் என்றார். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளை.. காட்சிகளை.. இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் பேசியதாவது...
ஒரு சினிமா நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கும் என்பதை, மீண்டும் மீண்டும் ஒரு நல்ல சினிமா சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்க எல்லாம் சென்னையிலேயே பிறந்து எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம், ஆனால் கிராமத்து பக்கம், இன்னும் இது மாதிரி சம்பவங்கள், தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஒரு படமாக உங்கள் முன்னால் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இரா. சரவணன் போன்ற இயக்குனர்கள் இருப்பது மகிழ்ச்சி. இயக்குனர் இரா சரவணனின் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களுக்கு நான் ரசிகன். விஷுவலாகவும் திரைப்படத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மாற்றத்தை பேசும் மாமன்னர்கள் இருக்கும் சமூகத்தில் அதை அடிமட்டத்தில் இருந்து சமத்துவத்தை பேசும் நந்தனார்களும் நமக்குத் தேவை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசியதாவது...
இயக்குநர் இரா. சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், நாம் நிறைய பேரோடு பழகுவோம், ஆனால் சிலருடன் மட்டும்தான் நெருக்கமாக இருப்போம், அந்த வகையில் இரா. சரவணன் மிக அற்புதமான நண்பர், அவரோடு நிறைய சினிமா பற்றி பேசுவேன். 'உடன்பிறப்பே' படத்திற்கு பிறகு, அவர் பெரிய இடத்தை அடைவார் என வாழ்த்தினேன். இப்போது 'நந்தன்' படத்திற்கு பிறகு, அவருக்கு அந்த இடம் கிடைக்கும். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி, இந்த படத்தை அவர் செய்துள்ளார். நடிகர்கள், தயாரிப்பு குழுவினர், படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது...
படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும், படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தை தொடங்கினார், அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார்.
இந்த கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார், நான் தயங்கினேன். முதன்முதலில் சமுத்திரகனி தான் என்னை நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை, நான் ஒரு இயக்குனர் தான், நன்றாக நடித்தேன் என அவர்கள் சொன்னால் மகிழ்ச்சி. இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது.
சரவணன் தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்த திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். '16 வயதினிலே' படத்திற்கு பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்த திரைப்படத்திற்காக தந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை, உண்மையாகவே மிக அற்புதமான திரைப்படம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசியதாவது...
அனைவருக்கும் வணக்கம், இந்த மேடை எனக்கு மிக மிக முக்கியமான மேடை. ரொம்ப ரொம்ப எமோஷனல் ஆக உள்ளது. ஒரு புதிய முகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது, மிகப்பெரிய விசயம், ஆனால் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்தார் இயக்குநர் சரவணன் சார், அவருக்கு நன்றி. திரைத்துறைக்கு வந்த பிறகு, இது மிகப்பெரிய இண்டஸ்ட்ரி, இதில் தினமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது, ஆனால் என்றென்றைக்கும் இந்த திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும், ஆதரவு தந்ததற்கும், அனைவருக்கும் என் நன்றிகள். சசிகுமார் சாரை, வேறு நிறைய படங்களில் ஹீரோவாக பார்த்திருக்கிறேன், ஆனால் கூட நடிக்கும் போது, மிக மிக எளிமையாக என்னிடம் பழகினார், நிறைய சொல்லித் தந்தார். மிக ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றிகள். இந்த படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக உங்களை இந்த படம் மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.
Trident Arts ரவீந்திரன் பேசியதாவது...
இந்த படத்தை பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாது. சசி சார் கூப்பிட்டு, சார் ஒரு படம் செய்திருக்கிறேன், வந்து பாருங்கள் என்றார். படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கூட அப்போது ரெடியாகவில்லை, இது கமர்சியல் படம் இல்லை, வித்தியாசமான படம் பாருங்கள் என்றார். படம் பார்த்து அதிர்ந்து விட்டேன். தமிழ் சினிமாவுக்கு என, சில மரபுகள் இருக்கும், படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு, என காட்சி வைப்பார்கள், ஆனால் இந்த படத்தில் காலணியை குளோசப்பில் காட்சிபடுத்தி இருந்தார்கள். படம் முடிக்கும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது, எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்த படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர, மிகவும் மெனக்கெட்டு, இப்படத்தை செய்துள்ளார்கள். படத்தில் யாருமே நடிகர்களாக இல்லை, ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். சசிகுமார் அப்படியே உருக்கிவிட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து, பிரமிப்பது புதிதாக இருந்தது. எங்களின் அனைத்து படத்திற்கும் தந்த ஆதரவைப் போல, இந்த படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஹெச். வினோத் பேசியதாவது...
நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் "உடன்பிறப்பே" மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் இரா சரவணன் பேசியதாவது...
சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை, இது இதுதான் எனக்கு முதல் மேடை, முதல் இரண்டு படங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் பேச வேண்டிய விசயங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் பேசி விட்டார்கள். அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்த திரைப்படத்தை பார்த்து, பாராட்டிய அன்றுதான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தை செய்திருக்கிறோம், என்ற நம்பிக்கை வந்தது. அண்ணனுக்கு என் நன்றிகள்.
ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணைக்கு கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள், ஆனால் Trident Arts ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார், சார் உங்கள் மனதுக்கு என் நன்றிகள்.
இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும், ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு, கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன். முழு மக்களின் கூட்டத்திற்கு நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.
இந்த படத்தை நாங்கள் எடுத்தோம் என்றாலும், இந்த படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இன்று இந்த மேடை வரை கொண்டு வந்தது, Think Music சந்தோஷ் அவர்கள் தான். அவர் எத்தனையோ பேருக்கு, நல்லது செய்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவர்தான் ஜிப்ரானையும் பரிந்துரைத்தார். நான் முதலில் இந்த படத்திற்கு இமான் அவர்களை அணுக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சந்தோஷ்.. ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் என்றார். அவர் எப்படியும் படம் பார்த்துவிட்டு முடியாது என்று தான் சொல்வார் என்று நினைத்துதான் படத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் படத்தை பார
வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது .
தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது.
வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.இரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…
என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்.
நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது....
இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது…
மூன்று நாள் தான் நடித்தேன். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது நம் பார்லிமெண்ட் ஞாபகம் வரும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்.
இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…
புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச்சிறந்த படமென இதைச் சொல்வேன். எல்லோருமே புதுப்பேட்டை மாதிரி ஒரு படம் வரவில்லையே எனக்கேட்பார்கள், அவர்களுக்கான பதில் தான் இந்தப்படம். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கும். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும். ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. இந்தக்குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர். என் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…
ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர் சி சாருடன் தான் பார்த்தேன், உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன். அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்.
நடிகர் ஹரீஷ் உத்தமன் பேசியதாவது…
ஹிப்ஹாப் ஆதி சினிமாவுக்கு வந்ததிலிருந்து, அவர் செய்த ஒவ்வொரு விசயத்திலும், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சொல்லுணும் என்று தான் செய்வார். இந்தப்படத்தில் நடிக்கும் முன், இப்படத்தில் ஃப்ரீ விஷுவல் காட்டினார் அதுவே எனக்குப் பிரமிப்பைத் தந்தது. அவர் எப்படி தான் இவ்வளவு வேலை செய்கிறார் எனத் தெரியவில்லை, இந்தப்படத்தில் பிரக்யோக் சிங் எனும் கேரக்டர் செய்துள்ளேன், தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிங் கேரக்டர், பிஸிகலாக சவாலான கேரக்டர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இன்று ஹிப் ஹாப் தமிழா ஒரு பிராண்ட் என்பதை விட, ஒரு மூவ்மெண்ட் என்பதாகத் தான் பார்க்கிறேன். இளைஞர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஜீவாவும் ஆதியும் எனக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் வாழ்த்துகள்.
நடிகர், நடன இயக்குனர் கல்யாண் பேசியதாவது..
நான் நடித்து பல வருடமாகிவிட்டது. ஆதி சொன்ன பிறகு, இந்தப்படத்தில் நடித்தேன். இவ்வளவு சின்ன வயதில் மிக மெச்சூர்டாக படம் செய்வது, மிகப்பெரிய விசயம். மொத்த டீமும் அவ்வளவு சிரத்தையாக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப்படத்தில் நட்டி சாருடன் ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் குமரவேல் பேசியதாவது..,
மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. சுந்தர் சி இரண்டு நல்ல மனமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது மொத்த டீமும் அற்புதமாக உழைத்துள்ளார்கள்.
நடிகர் இளங்கோ குமரன் பேசியதாவது..,
20 வயது ஆட்களை மட்டுமல்ல, 60 வயதில் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆதி தான். எனக்கு நடிப்பு தெரியாது, ஆனால் என்னை நடிகனாக்கியது அவர்தான். என்னை மிக மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். சிவகுமாரின் சபதம் படத்தில் என்னை முழு நேரப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் மீண்டும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர் பயணத்தில் தொடர்ந்து நாங்களும் இருப்போம். அனைவருக்கும் நன்றி.
நடிகர் சாரா பேசியதாவது…
கடைசி உலகப் போர். ஆதி ப்ரோ இயக்கி நான் ஹீரோவாக நடிச்சிருக்க படம், நான் இங்கு நிற்க காரணம் மூன்று பேர். என்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், என்னை உலகம் அறிய வைத்த ஆதி, என்னை பயன்படுத்தச் சொன்ன சுந்தர் அண்ணா மூவருக்கும் நன்றி. ஆதியுடன் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கும், மிக ஃபிரண்ட்லியாக இருப்பார். சித்தர் ஜீவா ஆசையே இல்லாத மனிதனாக என்னைப் பிரமிக்க வைக்கிறார். எனக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடிகை அனகா பேசியதாவது…
ஆதி உடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. ஜீவா முதல் படக்குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் நன்றி.
ஒளிப்பதிவு அர்ஜூன்ராஜா பேசியதாவது…
இந்தக்கதை சொல்லும் போதே வித்தியாசமாக இருந்தது. புதிதாக ஒரு விசயத்தை முயற்சி செய்துள்ளோம். இப்போது நீங்கள் பார்க்கும் தியேட்டரில் ஸ்கோப் வரும், மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும். இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை, நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா சாரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா