சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

வடமாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் 'காடுவெட்டி'
Updated on : 04 March 2024

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் " காடுவெட்டி "



 



ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சங்கீர்த்தனா மற்றும் விஷ்மியா இருவரும் கதா நாயகிகளாக நடித்துள்ளனர்.



 



சுப்ரமணியசிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோரும்  குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.



 



படம் பற்றி இயக்குனர் சோலை ஆறுமுகம் பகிர்ந்தவை...



மறுமலர்ச்சி,சிந்துநதிப் பூ,ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்குப் பிறகு வடமாவட்ட வாழ்வியலை சொல்லும் படம்தான் காடுவெட்டி, மன்னர்கள் போர் செய்த காலத்தில் போர்வீரர்கள் போர் பயிற்சிக்காக இடங்களை தேர்வு செய்து காடுகளை வெட்டினார்கள்,வெட்டிய நிலங்களில் பாதியை போர் பயிற்சிக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர்,போர்க்கால முடிவுக்குப் பிறகு அந்த நிலங்கள் ஊர்களாக மாறியது,அந்த ஊர்களுக்கு காடுவெட்டி என பெயரிட்டனர்,விவசாயம் செய்த தமிழ் பூர்வக்குடிகளின் கதை என்பதால் காடுவெட்டி என படத்திற்கு பெயர் வைத்தோம்.



 



கல்வியறிவும் பொருளாதார மேம்பாடும் இருந்தால் மட்டுமே பிழைப்புவாத அரசியலிடமிருந்து சாமானிய மக்கள் தங்களை  காபாற்றிக்கொள்ள முடியும்.



 



மனித சமூகத்தின் வேறுபாடுகளை நேர்மையான பாதைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும்,குறுக்குவழி வன்முறையை மட்டுமே உருவாக்கும்.



 



காதலோட வலியை சொல்ல ஆயிரம் படம் இருக்கு,பெத்தவங்களோட வலியை சொல்ல ஒன்னு ரெண்டு படங்கள்தான் இருக்கு,அந்த ஒன்னு ரெண்டு படத்துல இந்த படமும் இருக்கும் என்றார் இயக்குனர் சோலை.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா